Delhi MCD Election Result 2022:டெல்லி தேர்தல் முடிவு: பாஜகவுக்கு இறங்கு முகம்!ஆம்ஆத்மி தொடர் முன்னிலை

By Pothy RajFirst Published Dec 7, 2022, 11:06 AM IST
Highlights

டெல்லி மாநகராட்சியில் கடந்த 15 ஆண்டுகாலமாக கோலோட்சி வந்த பாஜகவின் ராஜ்ஜியம் முடிவுக்கு வருகிறது. பெரும்பான்மைக்குத் தேவையான 126 இடங்களுக்கும் அதிகமான இடங்களில் ஆம் ஆத்மி கட்சிமுன்னிலை பெற்றுள்ளது.

டெல்லி மாநகராட்சியில் கடந்த 15 ஆண்டுகாலமாக கோலோட்சி வந்த பாஜகவின் ராஜ்ஜியம் முடிவுக்கு வருகிறது. பெரும்பான்மைக்குத் தேவையான 126 இடங்களுக்கும் அதிகமான இடங்களில் ஆம் ஆத்மி கட்சிமுன்னிலை பெற்றுள்ளது.

டெல்லியில் உள்ள 250 வார்டுகளுக்கும் கடந்த 4ம்தேதி வாக்குப்பதிவு நடந்தது இன்று ஓட்டு எண்ணிக்கை நடந்து வருகிறது. இன்று காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கைகாக 42 மையங்கள் அமைக்கப்பட்டு 68 தேர்தல் பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. 

ஜி20 ஆலோசனைக் கூட்டம் - தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட பல்வேறு மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி!

 இதில் ஆம் ஆத்மி கட்சியும், பாஜகவும் 250 வார்டுகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. காங்கிரஸ் கட்சி 247 வார்டுகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. 

இந்த உள்ளாட்சித் தேர்தல் டெல்லியில் அடுத்து நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாகப் பார்க்கப்பட்டதால், ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டன. 

ஜி20 தலைமை.. தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும்.! பிரதமர் மோடியிடம் உறுதியளித்த முதல்வர் ஸ்டாலின் !!

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் கருத்துக்கணிப்பில் வந்ததுபோல், ஆம்ஆத்மி கட்சி 20 வார்டுகளில் முன்னிலையுடன் நகர்ந்தது. பாஜக 2வது இடத்திலும், காங்கிரஸ் 3வது இடத்திலும் இருந்தன.
ஆனால், வாக்கு எண்ணிக்கை ஒரு மணிநேரத்தைக் கடந்த நிலையில், கருத்துக்கணிப்புகளுக்கு மாறாக, ஆம்ஆத்மி கட்சியை முந்தி பாஜக முன்னிலை பெறத் தொடங்கியது. 

பாஜக இதுவரை 128 தொகுதிகளில் முன்னிலையுடன் நகர்ந்து வருகிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி 118 தொகுதிகளில் முன்னிலையுடன் உள்ளது. ஆம் ஆத்மி கட்சி, பாஜக இடையே போட்டி கடுமையாக இருந்து வருகிறது. 

இதில் முதலாவதாக தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பாஜக 10 வார்டுகளில் வென்று முன்னிலை பெற்றுள்ளது, ஆம் ஆத்மி கட்சி 6 வார்டுகளில் வென்று முன்னிலை பெற்றுள்ளது.

ஜம்மா மஸ்ஜித் வார்டில் ஆம்ஆத்மி வேட்பாளர் சுல்தானா அபாட், தர்யாகாஞ்ச் வார்டில் ஆம்ஆத்மி வேட்பாலற் சரிகா சவுத்ரி வெற்றி பெற்றார். லட்சுமி நகரில் பாஜகவேட்பாளர் அல்கா ராகப் 3,819 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். ரோஹினி வார்டில் ஸ்மிதா வெற்றி பெற்றார். ரஞ்சித் நகரில் ஆம் ஆத்மி வேட்பாளர் அன்குஷ் நராங் வாகை சூடினார்.

டெல்லி மாநகராட்சித் தேர்தல் ஓட்டு எண்ணிக்கை: பாஜக முன்னிலை! ஆம் ஆத்மி பின்னடைவு

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குடியிருக்கும் 74வது வார்டு சாந்தினி சவுக் பகுதியில் பாஜக வேட்பாளர் ரவிந்திர குமார் முன்னிலையில் உள்ளார். 

தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், " ஆம் ஆத்மி கட்சி இதுவரை 36 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது, 32 இடங்களில் பாஜக வென்றுள்ளது, காங்கிரஸ் 4 வார்டுகளில் வென்றுள்ளது. 

ஆம் ஆத்மி கட்சி தற்போது 102 தொகுதிகளில் முன்னிலையுடன் நகர்ந்து வருகிறது. பாஜக 83 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுபின்தங்கியுள்ளது. காங்கிரஸ்கட்சி 8 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது" எனத் தெரிவித்துள்ளது

15 ஆண்டுகள் ராஜ்ஜியம் முடிகிறது

டெல்லி மாநகராட்சியில் கடந்த 15 ஆண்டுகாலமாக கோலோட்சி வந்த பாஜகவின் ராஜ்ஜியம் முடிவுக்கு வருகிறது. பெரும்பான்மைக்குத் தேவையான 126 இடங்களுக்கும் அதிகமான இடங்களில் ஆம் ஆத்மி கட்சிமுன்னிலை பெற்றுள்ளது.

பாஜகவைவிட கூடுதலாக 25 இடங்களில் முன்னிலையுடன் ஆம் ஆத்மி கட்சி நகர்ந்து வருகிறது. 
தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளபடி, இதுவரை ஆம் ஆத்மி கட்சி 89 இடங்களில் வென்றுள்ளது, பாஜக 69 இடங்களில் வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 

ஆனால் டைம்ஆப் இந்தியா இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளபடி, ஆம்ஆத்மி 92 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது, பாஜக 73 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது, காங்கிரஸ் 4 இடங்களுக்கு மேல் நகரவில்லை.

டெல்லி தேர்தலில் 90 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. அதில் 130 வார்டுகளில் ஆம் ஆத்மி தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது, பாஜக 75 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 
ஆம் ஆத்மி கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட திருநங்கை பாபி, சுல்தான்புரி வார்டில் வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் வருணா தாக்காவை 6 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பாபி வென்றார்.

 

click me!