Delhi MCD Election Result 2022:டெல்லி மாநகராட்சித் தேர்தல் ஓட்டு எண்ணிக்கை: பாஜக முன்னிலை! ஆம் ஆத்மி பின்னடைவு

By Pothy RajFirst Published Dec 7, 2022, 9:22 AM IST
Highlights

டெல்லி மாநகராட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் கருத்துக்கணிப்புகளுக்கு மாறாக பாஜக முன்னிலையுடன் நகர்ந்து வருகிறது, ஆளும் ஆம் ஆத்மி கட்சி பின்னடைவைச் சந்தித்து வருகிறது.

டெல்லி மாநகராட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் கருத்துக்கணிப்புகளுக்கு மாறாக பாஜக முன்னிலையுடன் நகர்ந்து வருகிறது, ஆளும் ஆம் ஆத்மி கட்சி பின்னடைவைச் சந்தித்து வருகிறது.

டெல்லி மாநகராட்சித் திருத்தச்சட்டம் 2022, மூலம் தலைநகரின் 3 உள்ளாட்சி அமைப்புகளும் இணைக்கப்பட்டன. அதன்பின் முதல்முறையாக உள்ளாட்சித் தேர்தல் கடந்த 4ம் தேதி நடந்தது. 

வாபஸ் பெறப்பட்டது விழிஞ்சம் போராட்டம்… முதல்வருடனான பேச்சுவார்த்தைக்கு பின் முடிவு!!

டெல்லியில் உள்ள 250 வார்டுகளுக்கும் ஒரே நேரத்தில் வாக்குப்பதிவு நடந்தது. இதில் ஆம் ஆத்மி கட்சியும், பாஜகவும் 250 வார்டுகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. காங்கிரஸ் கட்சி 247 வார்டுகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. 

இந்த உள்ளாட்சித் தேர்தல் டெல்லியில் அடுத்து நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாகப் பார்கப்பட்டதால், ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டன. 709 பெண் வேட்பாளர்கள் உள்பட 1,349 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டுள்ளனர்.

தேர்தல் முடிந்து வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கைகாக 42 மையங்கள் அமைக்கப்பட்டு 68 தேர்தல் பார்வையாளர்களை தேர்தல் ஆணையம்நியமித்துள்ளது. வாக்கு எந்திரங்களில் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறுகளைச் சரிசெய்ய 136 பொறியாளர்களும் தயாராக வைக்கப்பட்டுள்ளனர். 

3 ஆண்டுகளுக்குப்பின் யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கு மீண்டும் விமான சேவை: இலங்கை அரசு

வாக்கு எண்ணும் மையங்களில் பூத் ஏஜென்ட், அரசியல் கட்சியினர் பார்வைக்காக மிகப்பெரிய எல்இடி திரை பொருத்தப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் இடங்களில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் கருத்துக்கணிப்பில் வந்ததுபோல், ஆம்ஆத்மி கட்சி 20 வார்டுகளில் முன்னிலையுடன் நகர்ந்தது. பாஜக 2வது இடத்திலும், காங்கிரஸ் 3வது இடத்திலும் இருந்தன.
ஆனால், வாக்கு எண்ணிக்கை ஒரு மணிநேரத்தைக் கடந்த நிலையில், கருத்துக்கணிப்புகளுக்கு மாறாக, ஆம்ஆத்மி கட்சியை முந்தி முன்னிலை பெற்றுள்ளது பாஜக. 

முதல்வர் வீட்டில் திடீரென வெடித்த துப்பாக்கி.. அதிர்ச்சியில் காவல்துறை.! பரபரப்பு சம்பவம்.!

பாஜக இதுவரை 128 தொகுதிகளில் முன்னிலையுடன் நகர்ந்து வருகிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி 118 தொகுதிகளில் முன்னிலையுடன் உள்ளது. ஆம் ஆத்மி கட்சி, பாஜக இடையே போட்டி கடுமையாக இருந்து வருகிறது. இரு கட்சிகளுக்கும் இடையே 20 இடங்கள்வேறுபாட்டில் நகர்ந்து வருவதால், பரபரப்புடன் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. டெல்லி மாநகராட்சியை யார் கைப்பற்றப்போவது என்பது மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளது
 

click me!