Demonetisation:பணமதிப்பிழப்பு ஆவணங்களை தாக்கல் செய்யுங்கள்: மத்திய அரசு,ஆர்பிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

By Pothy RajFirst Published Dec 7, 2022, 3:33 PM IST
Highlights

2016ம் ஆண்டில் நடந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் வரும் 10ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

2016ம் ஆண்டில் நடந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் வரும் 10ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு, நவம்பர் 8ம் தேதி பிரதமர் மோடி தலைமையிலான அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையைக் கொண்டு வந்தது. இதன்படி, புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் அனைத்தும் செல்லாது என அறிவிக்கப்பட்து. இதற்கு பதிலாக புதிய ரூ.2000, ரூ.500, ரூ.100 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

புழக்கத்தில் இருந்த பணம் பெருவாரியாக வங்கி செயல்முறைக்குச் சென்றது.  அதற்கு மாற்றாக போதுமான அளவு பணம் அச்சடிக்காமல் மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கை செய்ததால் மக்கள் பெரும் சிரமப்பட்டனர். தங்கள் பணத்தையே வங்கியிலிருந்து எடுக்க முடியாமலும், ஏடிஎம்களில் இருந்து எடுக்க முடியாமல் கடும் வேதனை அடைந்தனர். ஏடிஎம்களிலும், வங்கிகளிலும் பணம் எடுக்க வரிசையில் நின்ற பலர் உயிரிழந்தனர். 

டெல்லி மாநகராட்சித் தேர்தல் ஓட்டு எண்ணிக்கை: பாஜக முன்னிலை! ஆம் ஆத்மி பின்னடைவு

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் தீவிரவாதிகளிடம் இருந்து கள்ளநோட்டு ஒழிக்கப்படும், தீவிரவாதம் ஒழிக்கப்படும், கள்ளநோட்டுகள் வங்கிக்குள் வந்துவிடும் என்று மத்திய அரசு கூறியது. ஆனால் ரிசர்வ் வங்கியின் இறுதி அறிக்கையில் நாட்டில் புழக்கத்தில் இருந்த பணமும், ரிசர்வ் வங்கியின் இருப்பில் இருந்த பணத்தின் மதிப்பிலும் பெரிதாக மாற்றமில்லை, கள்ளநோட்டுகள் மிகக்குறைவாக பிடிபட்டன எனத் தெரிவித்தது. 

மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை சட்டத்துக்கு உட்பட்டு செய்யப்பட்டதா என்று விசாரிக்க உத்தரவிடக்கோரி ஏராளமானோர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

உச்ச நீதிமன்ற நீதிபதி, எஸ்.ஏ. நசீர் தலைமையில், நீதிபதிகள் பிஆர் காவே, ஏஎஸ் போண்ணா, வி.ராமசுப்பிரமணியன், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரிக்கப்பட்டது.
மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கட்ரமணி, மனுதார்கள் தரப்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்,மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான் ஆஜராகினர்.

ஜனநாயக மதிப்புகளை உயர்த்துவார் குடியரசு துணைத் தலைவர் தன்கர்: பிரதமர் மோடி

மத்திய அரசு தரப்பில் வைத்த வாதத்தில் “ பணமதிப்பிழப்பு நடவடிக்கை நன்கு ஆலோசிக்கப்பட்டு எடுக்கப்பட்ட முடிவு. கள்ளநோட்டு, கறுப்புப்பணம் ஆகியவற்றை ஒழிக்க அரசுஎடுத்த ராஜதந்திர நடவடிக்கை. பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மறுபரிசீலனை என்ற பேச்சுக்கே இடமில்லை. ” என்று தெரிவித்தது.

ரிசர்வ் வங்கி தரப்பில் வைத்த விளக்கத்தில் “ நாட்டின் வளர்ச்சிக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைதான் பணமதிப்பிழப்பு. இதில் சில சிரமங்கள் மக்களுக்கு இருந்தன. ஆனால், அதற்குரிய வழிகள் மூலம் தீர்க்கப்பட்டன” எனத் தெரிவித்தது

ப.சிதம்பரம் வாதிடுகையில் “ ரிசர்வ் வங்கியில் மத்திய குழுவின் பரிந்துரையின் அடிப்படையில்தான் எந்த நடிவடிக்கையையும் மத்திய அரசு எடுக்க முடியும். தன்னிச்சையாக எந்த செயலையும்மத்திய அரசு செய்ய முடியாது” எனத் தெரிவித்தார்

டெல்லி தேர்தல் முடிவு: பாஜகவுக்கு இறங்கு முகம்!ஆம்ஆத்மி தொடர் முன்னிலை

இதையடுத்து, 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு கூறுகையில் “ இந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்படுகிறது. மத்திய அ ரசு, ரிசர்வ் வங்கி ஆகியவை 2016ம் ஆண்டு நடந்த பணமதிப்பிழப்பு தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும், நீதிமன்றத்தில் வரும் 10ம் தேதிக்குள் சீல்வைக்கப்பட்ட கவரில் தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டனர்.

click me!