குஜராத்தில் கடந்த 1962ம் ஆண்டிலிருந்து இதுவரை சட்டசபைக்கு 111 பெண் எம்எல்ஏக்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டில் ஏதாவது மாற்றம் வருமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது.
குஜராத்தில் கடந்த 1962ம் ஆண்டிலிருந்து இதுவரை சட்டசபைக்கு 111 பெண் எம்எல்ஏக்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டில் ஏதாவது மாற்றம் வருமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது.
குஜராத், இமாச்சலப்பிரதேசம் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் குறித்து அனைவரும் எதிர்பார்த்துள்ளனர். வேட்பாளர்கள் சொத்துவிவரம், வழக்கு விவரம், கிரிமினல் வழக்குகள் குறித்து தேர்தல் ஆணையம் புள்ளிவிவரங்களை வெளியி்ட்டு வருகிறது. அதில் குறிப்பிடத்தகுந்த விஷயம், இதுவரை குஜராத் சட்டசபைக்கு 111 பெண் எம்எல்ஏக்கள்தான் தேர்ந்தெடு்கப்பட்டுள்ளனர் என்பதுதான்.
பணமதிப்பிழப்பு ஆவணங்களை தாக்கல் செய்யுங்கள்: மத்திய அரசு,ஆர்பிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
2022 குஜராத்தில் உள்ள 182 தொகுதிகளுக்கான சட்டசபைத் தேர்தலில் 1621 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர், இதில் 139 வேட்பாளர்கள் மட்டும்தான் பெண்கள்.அதாவது 10 சதவீதம் வேட்பாளர்கள்கூட இல்லை. இப்போது மட்டுமல்லா கடந்த காலங்களில் குஜராத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் இதுவரை பெண் வேட்பாளர்கள் எண்ணிக்கை மொத்த வேட்பாளர்களில் 10 சதவீதத்தைக் கடந்தது இல்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது
நியூஸ்18 சேனல் வெளியி்ட்ட புள்ளிவிவரத்தில், கடந்த 2017ம் ஆண்டு 13 பெண் எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதாவது 182 இடங்களில் 10 சதவீதம் கூட பெண்கள் வெற்றி பெறவில்லை. 1962ம் ஆண்டில் நடந்த முதல் தேர்தலில் 11 பெண்எல்ஏக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 2017ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 2 மட்டுமே அதிகரித்துள்ளது, அதாவது 13 பெண் எம்எல்ஏக்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஜனநாயக மதிப்புகளை உயர்த்துவார் குடியரசு துணைத் தலைவர் தன்கர்: பிரதமர் மோடி
கடந்த 1972ம் ஆண்டில் மிக மோசமாக ஒரு பெண் எம்எல்ஏ மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிகபட்சமாக 1985, 2007, 2012ம் ஆண்டுகளில் 16 பெண்எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
குஜராத் மாநிலத்தில் உள்ள வாக்காளர்களில் 50 சதவீதம் பெண் வாக்காளர்கள் உள்ளனர். ஆனால், அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் வேட்பாளர்களும் இல்லை, வெற்றிபெற்றால் பெண் எம்எல்ஏக்களும் இல்லை.
ஆளும் கட்சியான பாஜக, ஆம்ஆத்மி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பெண்கள் முன்னேற்றம், பெண்களுக்கு அதிகாரமளித்தல், பெண் சக்தி எனப் பேசினாலும், திட்டங்கள் வகுத்தாலும் தேர்தல் என வரும்போது பெண்களுக்கான முக்கியத்துவம் குறைந்து விடுகிறது.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதும் சரி, கடந்த 8 ஆண்டுகளாக பாஜகஆட்சியில் இருக்கும்போதும் சரி பெண்களுக்கான இடஒதுக்கீடு 33 சதவீதத்தை நிறைவேற்ற ஆட்சியாளர்களுக்கு இன்னும் மனமில்லை.
டெல்லி தேர்தல் முடிவு: பாஜகவுக்கு இறங்கு முகம்!ஆம்ஆத்மி தொடர் முன்னிலை
குஜராத் தேர்தலில் பாஜக சார்பில் 18 பெண் வேட்பாளர்கள் அதாவது 10 சதவீதம் மட்டுமே வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ல் 12 பெண் வேட்பாளர்கள் இருந்தனர்.
காங்கிரஸ் தரப்பில் 14 பெண்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது,கடந்த தேர்தலில் 10 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்பட்டது. ஆம்ஆத்மி கட்சி சார்பில் 6 பெண்கள் மட்டுமே போட்டியிடுகிறார்கள்.
குஜராத் சட்டசபையில் இந்தமுறையாவது 10சதவீதம் பெண் எம்எல்ஏகள் தேர்ந்தெடுக்கப்படுவார்களா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. இது எதிர்பார்ப்பு என்பதைவிட 60 ஆண்டுகால கனவாகும்.