Gujarat Election Result 2022: குஜராத்தில் ஓட்டு எண்ணிக்கை:பாஜக அசுர முன்னிலை:ஹர்திக் படேல்,அல்பேஷ் பின்னடைவு

By Pothy RajFirst Published Dec 8, 2022, 8:57 AM IST
Highlights

குஜராத்தில் நடந்த சட்டசபைத் தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில் பாஜக இமாலய முன்னிலையுடன் செல்கிறது. இதுவரை 126 தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குஜராத்தில் நடந்த சட்டசபைத் தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில் பாஜக இமாலய முன்னிலையுடன் செல்கிறது. இதுவரை 126 தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குஜராத்தில் உள்ள 182 சட்டசபைத் தொகுதிகளுக்கும் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் தேர்தல் நடந்தது. முதல் கட்டத் தேர்தலில் 89 தொகுதிகளுக்கும், 2ம் கட்டத் தேர்தலில் 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. 

இன்று காலை முதல் 33 மாவட்டங்களில் 37 மையங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள், தேர்தல் பார்வையாளர்கள் முன் சீல் உடைக்கப்பட்டு 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. 

குஜராத்தில் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது: பாஜக 77தொகுதிகளில் முன்னிலை

தொடக்கத்திலேயே பாஜக 2 தொகுதிகளில் முன்னிலை பெற்றது. ஆனால், நேரம் செல்லச் செல்ல பாஜக தொடர்ந்து முன்னிலையுடன் நகர்ந்து வருகிறது. காங்கிரஸுக்கும், பாஜகவுக்கும் இடையே 50 தொகுதிகள் முன்னிலை வித்தியாசம் இருந்து வருகிறது.

காலை 8.30 மணி நிலவரப்படி பாஜக இதுவரை 77 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 25 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி ஒரு தொகுதியிலும் முன்னிலை பெற்றுள்ளது.

ஆனால் அடுத்த சிறிது நேரத்தில் வலுவாக நகரும் பாஜக, 126 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது, காங்கிரஸ் கட்சி 52 தொகுதகிளிலும், ஆம்ஆத்மி கட்சி 2 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது.
காங்கிரஸ் கட்சியில் இருந்த பட்டிதார் இனத் தலைவர் ஹர்திக் படேல் தேர்தலுக்கு முன்பாக பாஜகவில் சேர்ந்தார். அவருக்கு விராம்கம் தொகுதியில் போட்டியிட்டார். இந்த வாக்கு எண்ணிக்கையில் ஹர்திக் படேல் பின்தங்கு வருகிறார்

இமாச்சல பிரதேச தேர்தல் முடிவுகள்: முந்தும் பாஜக.. விடாத காங்கிரஸ்!

அதேபோல சமூக செயற்பாட்டாளரும், கடந்தத் தேர்தலில் பாஜகவை கடுமையாக எதிர்த்தவருமான, காங்கிரஸில் இருந்த  அல்பேஸ் தாக்கூர் சமீபத்தில் பாஜகவில் சேர்ந்தார். பாஜகவில் சேர்ந்து தேர்தலில் வாய்ப்பு பெற்ற அல்பேஷ் தாக்கூர் காந்திநகர் தெற்கு தொகுதியில் போட்டியிட்டார், ஓட்டு எண்ணிக்கையில் அல்பேஷ் தாக்கூரும் பின்தங்கி வருகிறார். 


 

click me!