Gujarat Election: கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி பாஜக சார்பில் குஜராத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு

Published : Nov 10, 2022, 01:01 PM IST
Gujarat Election: கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி பாஜக சார்பில் குஜராத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு

சுருக்கம்

இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா பாஜக சார்பில் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவருக்கு ஜாம்நகர் வடக்குத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா பாஜக சார்பில் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவருக்கு ஜாம்நகர் வடக்குத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு ரிவாபா ஜடேஜா பாஜகவில் இணைந்த நிலையில் 2022ம் ஆண்டு தேர்தலில் அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கர்நாடக அரசு தேர்வு: அனுமதிச் சீட்டில் தேர்வு எழுதுவோர் புகைப்படத்துக்கு பதிலாக சன்னி லியோன் படம்

வடக்கு குஜராத் தொகுதியில் இதற்கு முன் பாஜகவின் தர்மேந்திரசின் ஜடேஜா அதாவது, ஹக்குபா ஜடேஜா எம்எல்ஏவாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குஜராத் சட்டப்பேரவைத்தேர்தல் இரு கட்டங்களாக நடக்கிறது. முதல்கட்டம் டிசம்பர் 1ம்தேதி 89 தொகுதிகளுக்கு நடக்கிறது. 2வது கட்டத்தில் 93 தொகுதிகளுக்கு டிசம்பர் 5ம் தேதி நடக்கிறது, டிசம்பர் 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

பாஜகவின் உயர்மட்ட தேர்தல் குழு நேற்று மாலை பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் கூடி ஆலோசித்தது. உள்துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் இதில் இருந்தனர். இதையடுத்து, குஜராத் தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இந்த தேசம் கடன்பட்டிருக்கு! நிதின் கட்கரி புகழாரம்

இதில் ஜாம்நகர் வடக்குத் தொகுதியில் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா போட்டியிட பாஜக சார்பில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.ரவிந்திர ஜடேஜா, ரிவாபா ஜடேஜாவுக்கும் இடையே கடந்த 2016ம் ஆண்டு திருமணம் நடந்தது. குஜராத் ராஜ்புத் குடும்பத்தைச் சேர்ந்தவர் ரிவாபா ஜடேஜா. இவரின் குடும்பத்தினர் ஜாம்நகர், சவுராஷ்டிரா மண்டலத்தில் தீவிரமான அரசியலில் ஈடுபட்டுள்ளனர் 

ஜி-20 மாநாடு: உலகத் தலைவர்களுக்கு பிரதமர் மோடி பரிசாக வழங்க உள்ள பொருட்கள் என்ன?

குஜராத் தேர்தலில் 160 தொகுதிக்கான வேட்பாளர்கள் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டது. இதில் 38 புதிய முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 69 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நாங்க இருக்கோம்.. விமான பயணிகளுக்கு கைகொடுத்த ஏர் இந்தியா.. இனி நோ கவலை!
கோவா தீ விபத்து: உயிரிழந்தோருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் – பிரதமர் மோடி அறிவிப்பு!