Election in Himachal Pradesh 2022 இமாச்சலப் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவு:

By Pothy Raj  |  First Published Nov 10, 2022, 11:47 AM IST

இமாச்சலப்பிரதேசத்தில் வரும் 12ம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது.


இமாச்சலப்பிரதேசத்தில் வரும் 12ம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது.

அதேசமயம், குஜராத் மாநிலத்தில் 2ம் கட்டத் தேர்தலுக்கான அறிவிக்கை இன்று வெளியிடப்படுகிறது.
இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள 68 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வரும் 12ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடக்கிறது, டிசம்பர் 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

Tap to resize

Latest Videos

பிரதமர் மோடியின் பயண விவரமும், நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ள திட்டங்களும்... முழு விவரம் உள்ளே!!

இமாச்சலப்பிரதேசத்தில் ஆட்சியைத் தக்கவைக்கும் நோக்கில், பாஜக தீவிரமாகப் பரிச்சாரம் செய்து வருகிறது. குறிப்பாக பொதுசிவில் சட்டம் நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியங்களை ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என்று வாக்குறுதியை அளித்து தேர்தலை சந்தித்து வருகிறது.

அதேநேரம், காங்கிரஸ் கட்சியும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறது. இதுவரை இமாச்சலப்பிரதேசத்துக்கு ராகுல் காந்தி, சோனியா காந்தி தேர்தல் பிரச்சாரத்துக்குச் செல்லவில்லை. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மட்டுமே களத்தில் இறங்கி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால், காங்கிரஸ் கட்சி சமூக வலைத்தளங்களில் இமாச்சலப்பிரதேசத் தேர்தலுக்காக தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறது. 

வார்த்தை பேசாது!என் வேலைதான் பேசும் ! மக்கள்தான் முக்கியம்: தலைமை நீதிபதி சந்திரசூட் சூசகம்

ஷிம்லா, கசும்தி, நபா ஆகிய இடங்களில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பாஜக தலைவர் அனுராக் சிங் தாக்கூர், காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தவில்லை என்று குற்றம்சாட்டினார். 

அதேசமயம், மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக விஜய் ஆசிர்வாத் பேரணியை 68 தொகுதிகளிலும் நடத்துகிறது. இந்த பேரணியில் வேட்பாளர்களை ஆதரித்தும், ஆட்சிமாற்றம் கோரியும் காங்கிரஸ் கட்சி பிரச்சாரத்தில் ஈடுபடுகிறது.

இதற்கிடையே குஜராத் சட்டப்பேரவைக்கு 2ம் கட்டத் தேர்தலுக்கான அறிவிக்கை இன்று வெளியிடப்படுகிறது. வரும் 17ம் தேதி முதல் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்யலாம்.
2ம் கட்டத் தேர்தலில் 93 தொகுதிகளுக்கு டிம்பர் 5ம் தேதி தேர்தல் நடக்கிறது. முதல்கட்டத் தேர்தலுக்கு இதுவரை 12 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். 

கர்நாடக அரசு தேர்வு: அனுமதிச் சீட்டில் தேர்வு எழுதுவோர் புகைப்படத்துக்கு பதிலாக சன்னி லியோன் படம்

குஜராத் மாநிலத்தில் இந்த முறை மும்முனைப் போட்டி நிலவுகிறது. காங்கிரஸ், பாஜகவுடன், இந்த முறை ஆம் ஆத்மி கட்சியும் மோதுகிறது. ஆளும் பாஜக கட்சி இன்று முதல்கட்ட வேட்பாளர்கள்பட்டியலை வெளியிடும் எனத் தெரிகிறது.

பாஜகவின் மூத்த தலைவர்களான முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி, துணை முதல்வர் நிதின் படேல் உள்ளிட்ட 4 தலைவர்களுக்கு வாய்ப்புக் கிடைக்காது எனத் தெரிகிறது. 

பாஜகவின் உயர்மட்ட தேர்தல் குழு நேற்று மாலை டெல்லியில் கூடி ஆலோசித்தது. பிரதமர் மோடி தலைமையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் இதில் இருந்தனர்.

குஜராத் சட்டப்பேரவைத்தேர்தல் இரு கட்டங்களாக நடக்கிறது. முதல்கட்டம் டிசம்பர் 1ம்தேதி 89தொகுதிகளுக்கு நடக்கிறது. 2வது கட்டத்தில் 93 தொகுதிகளுக்கு டிசம்பர் 5ம் தேதி நடக்கிறது, டிசம்பர் 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

காங்கிரஸ் கட்சிக்கு குஜராத் தேர்தலில் அடுத்தடுத்த பின்னடைவு ஏற்பட்டு வருகிறது. ஏற்கெனவே 26 மூத்த நிர்வாகிகள் பாஜகவில் சேர்ந்தனர், அடுத்ததாக, எம்எல்ஏ பகவான் பரத் ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்தார். ஜலோட் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ பவேஷ் கட்ராவும் ராஜினாமா செய்தார் ஆனால் எந்தக் கட்சியிலும் இன்னும் சேரவில்லை

click me!