அருணாச்சலப்பிரதேசத்தில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம்.. பீதியில் பொதுமக்கள்..!

By Dhanalakshmi G  |  First Published Nov 10, 2022, 12:39 PM IST

அருணாச்சலப்பிரதேசத்தில் இன்று இரண்டு முறை நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. அருணாச்சல பிரதேசத்தின் மேற்கு சியாங் மாவட்டத்தில் இன்று காலை 10:31 மணியளவில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 


அருணாச்சலப்பிரதேசத்தில் இன்று இரண்டு முறை நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. அருணாச்சல பிரதேசத்தின் மேற்கு சியாங் மாவட்டத்தில் இன்று காலை 10:31 மணியளவில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

தொடர்ந்து இதே மாவட்டத்தில் காலை 10:59 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக இரண்டாவது நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. "நிலநடுக்கம் ரிக்டர்:3.5, 10-11-2022 அன்று ஏற்பட்டது, 10:59:43 IST, லேட்: 28.70 & நீளம்: 94.05, ஆழம்: 10 கிமீ ,இடம்: மேற்கு சியாங், அருணாச்சல பிரதேசம்." என்று தேசிய நில அதிர்வு மாயம் தெரிவித்துள்ளது. நிலத்திற்கு அடியில் பத்தடி ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவாகியுள்ளது.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- நள்ளிரவில் டெல்லி, நேபாளத்தில் நிலநடுக்கம்.. தூக்கிக்கொண்டிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு சாலையில் தஞ்சம்.!

இதற்கு முன்னதாக அந்தமான் நிகோபரில் இன்று அதிகாலை 2.29 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த நவம்பர் 9ஆம் தேதி நேபாளின் மேற்குப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.3ஆக இருந்தது. இதன் பிரதிபலிப்பு டெல்லி - என்சிஆர் போன்ற இடங்களிலும் காணப்பட்டது. டெல்லி, நொய்டா, குருகிராம், காசியாபாத், லக்னோ ஆகிய இடங்களில் இரவில் தூங்கிக் கொண்டிருதவர்கள் அலறி அடித்து எழுந்து சாலைகளில் தஞ்சம் அடைந்து இருந்தனர். நேபாளில் மட்டும் நில நடுக்கத்திற்கு 6 பேர் உயிரிழந்து இருந்தனர்.

இதையும் படிங்க;-  தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் ஜூன்ஸ், டி-சர்ட், லெகின்ஸ் அணிய தடை..!

click me!