ரயில்வேயில் பிளாட்ஃபார்ம் டிக்கெட் உள்ளிட்ட சேவைகளுக்கு வரிவிலக்கு: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு

By SG BalanFirst Published Jun 22, 2024, 7:52 PM IST
Highlights

மாணவர்கள் தங்கும் விடுதிக்கு வரிவிலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.20,000 க்குள் வாடகை உள்ள அறையில் 90 நாட்கள் வரை தங்கினால் வரிவிலக்கு அளிக்கப்படும்.

ரயில் நிலையங்களில் நடைமேடை பயணச்சீட்டு, பயணிகள் காத்திருப்பு அறை, பொருட்கள் வைக்கும் அறை உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கும் வரிவிலக்கு அளிக்க சனிக்கிழமை நடைபெற்ற ஜிஎஸ்டி கவன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

53வது ஜிஎஸ்டி கவன்சில் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. அனைத்து மாநில நிதி அமைச்சர்கள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்திற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

Latest Videos

குறிப்பாக, மாணவர்கள் தங்கும் விடுதிக்கு வரிவிலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.20,000 க்குள் வாடகை உள்ள அறையில் 90 நாட்கள் வரை தங்கினால் வரிவிலக்கு அளிக்கப்படும். இதேபோல ரயில்வேயில் நடைமேடை டிக்கெட், பயணிகள் பொருட்கள் வைக்கும் அறை, காத்திருப்பு அறை போன்ற சேவைகளுக்கும் இனி வரிவிலக்கு அளிக்கப்படும்.

Omeprazole – Fomepizole குழப்பத்தில் எடப்பாடி! விளக்கம் கொடுத்த அமைச்சர் மா. சுப்பிரமணியன்!

மேலும் இந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், அனைத்து விதமான பால்கேன்களுக்கும் ஜிஎஸ்டி வரி 12% ஆகக் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஃகு, அலுமினியம் இரும்பு பால்கேன்களுக்கும் இது பொருந்தும். அட்டைப்பெட்டி மீதான வரியும் 12% ஆக மாற்றப்பட்டுள்ளது.

சோலார் குக்கர், நீர் தெளிக்கும் ஸ்ப்ரிங்கினர் இந்திரங்களின் மீதான ஜி.எஸ்.டி. வரியும் 12 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யும் மத்திய பட்ஜெட் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, மத்திய பட்ஜெட்டில் உரங்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி மறுபரிசீலனை செய்யப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி அளித்துள்ளார்.

துப்பாக்கி உரிமம் கேட்டு விண்ணப்பித்த 42,000 இஸ்ரேல் பெண்கள்! 10,000 பேருக்கு பயிற்சி!

click me!