ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான விதிமுறைகளை இந்திய ரயில்வே மாற்றி உள்ளது.
பாதுகாப்பான, வசதியான பயணம், டிக்கெட் விலை குறைவு உள்ளிட்ட பல காரணங்களால் பெரும்பாலான மக்கள் ரயில் போக்குவரத்தை விரும்புகின்றனர். இதனால் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் மேற்கொள்கின்றனர். பயணிகளின் வசதியையும், பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் இந்திய ரயில்வே பல்வேறு நடவடிக்கைகள மேற்கொண்டு வருகிறது. இதற்காக புதிய விதிகளையும் அறிவித்து வருகிறது.
அந்த வகையில் தற்போது ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான விதிமுறைகளை இந்திய ரயில்வே மாற்றி உள்ளது. இந்திய ரயில்வே கொண்டு வந்துள்ள புதிய விதி குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். அதன்படி இனி நீங்கள் உங்களின் தனிப்பட்ட ஐஆர்சிடிசி கணக்கு மூலம் மற்றவர்களுக்கு ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியாது. அப்படி நீங்கள் முன்பதிவு செய்வதால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும். ஆம் உண்மை தான். மற்ற நபர்களுக்காக நீங்கள் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வது குற்றமாகக் கருதப்படுகிறது. சட்டரீதியான பின்விளைவுகளை எதிர்கொள்வதைத் தவிர்ப்பதற்கு இதில் உள்ள அபாயங்களைப் பற்றி எச்சரிக்கையாக இருப்பது முக்கியம்.
undefined
ரயில் பயணிகள் தங்களுக்கு விருப்பமான இருக்கையைத் தேர்ந்தெடுக்க IRCTC அனுமதிப்பதில்லை.. ஏன் தெரியுமா?
ரயில்வே சட்டத்தின் 143வது பிரிவின்படி, மூன்றாம் நபர்களுக்கு முன்பதிவு செய்ய அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்ட முகவர்களுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. இந்த விதியை மீறினால் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ. 10,000 அபராதம் உட்பட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். .
இதுதொடர்பாக புதிய விதிமுறைகளை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது. அதன்படி தனிப்பட்ட அடையாள அட்டையைப் பயன்படுத்தி, தனிநபர்கள் இரத்த உறவுகளுக்கு அல்லது அதே குடும்பப்பெயரைக் கொண்டவர்களுக்கு மட்டுமே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும். நண்பர்கள் அல்லது பிறருக்காக முன்பதிவு செய்தால் ரூ. 10,000 அல்லது 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் கிடைக்கலாம்.
ரயில் டிக்கெட் தொலைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? இந்த ரயில்வே விதி உங்களுக்கு தெரியுமா?
இந்த விதி தவறான பயன்பாட்டைத் தடுப்பதையும், டிக்கெட் முன்பதிவுகளில் பொறுப்புணர்வை உறுதிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த விதியை மீறுவது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.
ஆதாருடன் இணைக்கப்பட்ட IRCTC ஐடியைக் கொண்ட பயனர்கள் மாதந்தோறும் 24 டிக்கெட்டுகள் வரை முன்பதிவு செய்யலாம், அதேசமயம் ஆதார் இணைப்பு இல்லாமல் என்றால் 12 டிக்கெட்டுகள் வரை முன்பதிவு செய்யப்படும். ஒவ்வொரு ஐடி மூலம் அதிகபட்சம் 12 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம், தனிப்பட்ட பயன்பாட்டிற்காக அல்லது குடும்ப உறுப்பினர்களுக்காக இந்த வரம்பை மீறும் எந்த முன்பதிவும் சட்ட விரோதமாக கருதப்படும்.