பிசிசி ஆவணப்படம் தொடர்பான யூடியூப், ட்விட்டர் பதிவுகள் முடக்கம்

By SG Balan  |  First Published Jan 22, 2023, 9:36 AM IST

2002 குஜராத் கலவரம் பற்றி பிசிசி செய்தி நிறுவனம் எடுத்த ஆவணப்படம் தொடர்புடைய சுமார் 50 ட்விட்டர், யூடியூப் பதிவுகளை மத்திய அரசு முடக்கியுள்ளது.


பிரிட்டனைச் சேர்ந்த பிபிசி செய்தி நிறுவனம் அண்மையில் வெளியிட்ட ஆவணப்படம் ‘India: The Modi Question’. இந்த ஆவணப்படத்தில் 2002ஆம் ஆண்டு நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது கோத்ராவில் நடந்த கலவரம் குறித்து விமர்சித்துள்ளது.

இந்த ஆவணப்படத்துக்கு இந்தியாவிலிருந்து கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், யூடியூப் தளத்திலிருந்து அந்த ஆவணப்படம் நீக்கப்பட்டது.

Tap to resize

Latest Videos

வெளியுறவுத்துறை, உள்துறை மற்றும் தகவல் ஒளிபரப்புத்துறை உள்ளிட்ட பல துறை அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகள் இந்த ஆவணப்படத்தை ஆய்வு செய்துள்ளனர்.

Republic Day 2023: குடியரசு தின விழா பிரமாண்ட அணிவகுப்பை நேரில் காண டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது எப்படி?

பிபிசியின் ஆவணப்படம் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தைதே விமர்சிக்கிறது என்றும் இந்தியாவில் வெளிநாட்டு அரசாங்க நடவடிக்கைகள் குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுகிறது என்றும் அமைச்சகங்கள் கருதுகின்றன.

இதனால், தகவல் ஒளிபரப்புத்துறை செயலாளர் அபூர்வ சந்திரா யூடியூப் மற்றும் ட்விட்டர் நிறுவனங்களுக்கு  பிசிசி ஆவணப்படம் தொடர்புடை பதிவுகளை நீக்க அறிவுறுத்தினார். அதன் பேரில் இரண்டு நிறுவனங்களும் சுமார் 50 பதிவுகளை முடக்கியுள்ளன.

தகவல் தொழில்நுட்ப விதிமுறைகள் 2021ல் உள்ள 16வது விதியின் கீழ் வழங்கப்பட்டுள்ள அவசரகால அதிகாரங்களை பயன்படுத்தி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Andaman Nicobar Islands: அந்தமான் நிகோபாரின் 21 தீவுகளுக்குப் பெயர் சூட்டும் பிரதமர் மோடி!

click me!