ஷாருக்கானா? அவரு யாரு? பத்திரிகையாளர்கள் வாயை அடைத்த முதல்வர்!

Published : Jan 21, 2023, 08:31 PM ISTUpdated : Jan 21, 2023, 08:35 PM IST
ஷாருக்கானா? அவரு யாரு? பத்திரிகையாளர்கள் வாயை அடைத்த முதல்வர்!

சுருக்கம்

பதான் திரைப்பட சர்ச்சை குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டபோது, அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஷாருக்கான் யார் என்று கேட்டுள்ளார்.

ஷாரூக்கான், தீபிகா படுகோன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தி படம் பதான். வரும் 25ஆம் தேதி வெளியாக உள்ள இந்தப் படம் அண்மையில் சர்ச்சையில் சிக்கியது. அந்தப் படத்தில் காவி உடையில் நடிகை தீபிகா படுகோன் ஆபாச நடனம் ஆடுவதாக இந்துத்துவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.

அசாமில் அந்தப் படத்தைத் திரையிட எதிர்ப்பு தெரிவித்து நேற்று பஜ்ரங் தளம் கட்சியைச் சேர்ந்தவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். நாரெங்கி நகரில் பதான் திரைப்படம் திரையிடப்பட உள்ள தியேட்டரில் நுழைந்து போஸ்டர்களைக் கிழித்து எறிந்து தீ வைத்தனர்.

இந்தச் சம்பவம் பற்றி இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அசாம் முதல்வர் சர்மா, தடாலடியாக, தனக்கு ஷாருக்கானை யாரென்றே தெரியாது என்று என்று சொல்லிவிட்டார்.

பள்ளிச் சிறுவர்கள் காண்டம் பயன்படுத்த தடை இல்லை: கர்நாடக அரசு விளக்கம்!

“இந்த பிரச்னை பற்றிப் பேச பாலிவுட் பிரபலங்கள் நிறைய பேர் என்னைத் தொடர்பு கொண்டார்கள். ஷாருக்கான் என்னை அழைக்கவில்லை. அவர் அழைத்தால் நான் தலையிட்டு என்னவென்று கவனிப்பேன். சட்டம் ஒழுங்கு மீறப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறினார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!
ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!