Google Maps : இக்கால இளைஞர்கள் மட்டுமல்ல, அதிக அளவிலான மக்கள் பெரிதும் பொதுவெளியில் பயன்படும் ஒரு செயலியாக மாறியுள்ளது கூகுள் நிறுவனத்தின் மேப்ஸ்.
கூகுள் மேப்ஸ், செயற்கைக்கோள் படங்களை பயன்படுத்தி, அதன் மூலம் நாம் தேடும் இடங்களுக்கான வழியை சொல்லும் ஒரு செயலி. மேலும் ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடத்தை அடைய அதைச் சார்ந்துள்ளனர் என்றே கூறலாம். இருப்பினும், காலாவதியான தரவு, GPS மற்றும் இணைப்புச் சிக்கல்கள் மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக Google Maps சில நேரங்களில் தவறாக வழிநடத்தும்.
ஆகையால் அதை பயன்படுத்தி தவறான பாதையில் செல்பவர்களின் கதைகள் இங்கு ஆயிரம் உண்டு. அப்படி ஒரு நிகழ்வு தான் தற்போது கர்நாடகாவில் நடந்துள்ளது. சமீபத்தில், கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் உள்ள உள்ளூர்வாசிகள் சிலர், Google Maps சொல்லும் குறிப்பிட்ட வழி தவறு என்று கூறி, பயணிகளை எச்சரிக்கும் வகையில் தற்காலிக பலகையை ஒன்றை வைத்தனர்.
ராகுல் காந்தியின் நியாய யாத்திரை இன்று நிறைவு!
அதில் "Google Is Wrong", இந்த பாதை கிளப் மகேந்திர பகுதிக்கு செல்லாது, என்று எழுதிவைத்துள்ளனர். வழி தேடி வந்து தொலைந்து போன பயணிகள் பலர் தங்களிடம் வழி கேட்டு கேட்டு, அதனால் சோர்வடைந்த உள்ளூர்வாசிகள் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளனர். குறிப்பாக கிளப் மஹிந்திரா செல்லும் பலரும் அந்த பாதைக்கு தவறாக வந்து ஏமார்ந்து போயுள்ளனர்.
Somewhere in Kodagu. pic.twitter.com/IkSQ9VybW1
— Kodagu Connect (@KodaguConnect)இது இணையத்தில் வைரலாகவே, அதை கண்ட ஒருவர், "கூகுள் எப்பொழுதும் நாம் சொல்வதை தவறாகப் புரிந்து கொள்கிறது. குக்கே சுப்ரமண்யாவிலிருந்து சுள்ளியா வழியாக மடிக்கேரிக்கு எப்படிப் அவர் பயணித்தார் என்பது குறித்து அவர் அதில் கூறியுள்ளார். Google Mapsஐ நம்பி பயணித்து சுமார் 80 கிமீ தூரம் பயணித்து, அதன் பின் தவறாகப் போகிறோம் என்பதை உணர்ந்து, பிறகு அங்கிருந்த உள்ளூர் நபர் மூலம் சரியான வழியில் பயணித்தோம் என்று கூறியுள்ளார்.
திருப்பதியில் இனி இவர்களுக்கு அனுமதி கிடையாது.. தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!