ரயில் பயணிகளுக்கு குட்நியூஸ்.. இனி ஈஸியா கன்ஃபார்ம் டிக்கெட்டை புக் பண்ணலாம்.. எப்படி தெரியுமா?

By Ramya s  |  First Published Apr 11, 2024, 3:17 PM IST

வெயிட்டிங் லிஸ்ட் பிரச்சனைக்கு தீர்வு காணும் புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


ரயில் டிக்கெட் செய்யும் போது ஏற்படும் மிகப்பெரிய அசௌகரியங்களில் ஒன்று வெயிட்டிங் லிஸ்ட். அதாவது உங்கள் பயணத்திற்கான டிக்கெட் உறுதிப்படுத்தப்படாமல் இருப்பது. ஆம் குறிப்பாக தீபாவளி, பொங்கல் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் ரயிலில் கன்ஃபார்ம் டிக்கெட் பெறுவது என்பது மிகவும் சவாலான விஷயங்களில் ஒன்று. விடுமுறை நாட்கள் அல்லது பண்டிகை காலங்களின் போது பல மாதங்களுக்கு முன்பே, ரயில் டிக்கெட் முன்பதிவு காலியாகிவிடும்.

இதனால் வெயிட்டிங் லிஸ்டில் தான் டிக்கெட் கிடைக்கும். குறைவாண எண்ணிக்கையில் வெயிட்டிங் லிஸ்ட் இருந்தால், ஒருவேளை டிக்கெட் உறுதியாகலாம். ஆனால் அதிக எண்ணிக்கை இருந்தால் கன்ஃபார்ம் டிக்கெட் பெறுவது சவாலான காரியம். எனவே இந்த வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் என்பது மிகப்பெரிய தலைவலியாக உள்ளது. 2023 ஆம் ஆண்டில் இந்திய ரயில்வே சுமார் 5.2 கோடி காத்திருப்புப் பட்டியலில் உள்ள டிக்கெட்டுகளை ரத்து செய்தது.

Tap to resize

Latest Videos

இந்த நிலையில் இந்தச் சிக்கலை எதிர்கொள்ள, redRail, பயணத்திற்கான காலக்கெடுவுக்குள் பயணிகளின் இலக்கை அடைவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க உதவும் தீர்வுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. redBus வழங்கும் redRail ஒரு IRCTC-அங்கீகரிக்கப்பட்ட கூட்டாளர். "இருக்கை உத்தரவாதம்" (Seat Guarantee)  மற்றும் "இணைக்கும் ரயில்கள்" "(Connecting Trains) ஆகிய இரண்டு நடைமுறை அம்சங்களை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இரண்டு புதிய அம்சங்களும் வெயிட்டிங் லிஸ்டில் இருக்கும் பயணிகள் எதிர்கொள்ளும் சவால்களைத் தணிக்க உதவும்.

சீட் கன்ஃபார்ம் : 

பயணத் திட்டங்களில் கடைசி நிமிட மாற்றங்கள் சவாலானதாக இருக்கலாம், குறிப்பாக வெயிட்டிங் லிஸ்டில் இருந்தால் சொல்லவே தேவையில்லை.. எனவே, இருக்கை உத்தரவாதம் அம்சத்துடன், பயணிகள் அசல் தொகையை விட இரட்டிப்பான பணத்தைத் திரும்பப் பெற முடியும். மேலும் அருகிலுள்ள இடங்களிலிருந்து டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

"இருக்கை உத்தரவாதம்" அம்சம், உறுதிப்படுத்தப்படாத ரயில் டிக்கெட்டுகள் குறித்த பயணிகளின் கவலையை எளிதாக்கும். சிறிய கட்டணத்தில் redRail செயலி அல்லது redBus செயலியின் redRail பிரிவில் செக் அவுட் செய்யும் போது பயணிகள் இந்த விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கலாம். பயணிகள் பட்டியல் தயாரான பிறகு, தங்களின் இருக்கை காத்திருப்பு பட்டியலில் இருந்தால், redRail கட்டணத்தை விட மூன்று மடங்கு வரை பணத்தை திரும்ப செலுத்தி விடும். 

பணத்தைத் திரும்பப்பெறுதல் இரண்டு வடிவங்களில் கிடைக்கும், அதாவது.  சாதாரண பணத்தைத் திரும்பப்பெறுதல்: பயணிகள் முழு டிக்கெட் தொகையையும் திரும்பப் பெறுவார்கள். வவுச்சராகப் பணத்தைத் திரும்பப்பெறுதல்: redBus அல்லது redRail பிளாட்ஃபார்மில் ஏதேனும் பேருந்து அல்லது ரயில் முன்பதிவுகளில் ரிடீம் செய்யக்கூடிய வவுச்சர் கூப்பனாக பெற்றுக்கொள்ளலாம். இந்த வவுச்சர்கள் டிக்கெட்டை விட 2 மடங்கு மதிப்பு கொண்டதாக இருக்கும்.

இணைக்கும் ரயில்கள்

நேரடி ரயில்கள் முழுமையாக முன்பதிவு செய்யப்படும் போது அல்லது காத்திருப்புப் பட்டியலில் இருக்கும் போது "இணைக்கும் ரயில்கள்" அம்சம் மாற்று ரயில் விருப்பத்தை வழங்கும். இந்த புதிய அம்சம் அவர்கள் விரும்பிய இலக்குக்கான பயணத்திற்கான உறுதிப்படுத்தப்பட்ட இருக்கைகளை பெறுவதற்கான வாய்ப்பை கணிசமாக விரிவுபடுத்துகிறது.

RedBus இன் CEO, பிரகாஷ் சங்கம் ஒரு அறிக்கையில், இந்த புதிய அம்சங்களின் அறிமுகம் இந்தியாவில் ரயில் பயணத்தின் முக்கிய முடிவை குறிக்கும். என்று கூறினார். "நவீன பயணிகள் உறுதி, நம்பகத்தன்மை மற்றும் தடையற்ற பயண அனுபவத்தை நாடுகின்றனர் என்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம். மேம்பட்ட பின்தள வழிமுறைகளைப் பயன்படுத்துவதன் மூலம், ஒவ்வொரு பயணிக்கும் ரயில் பயணத்தின் நம்பகத்தன்மையையும் வசதியையும் மேம்படுத்துகிறோம்" என்று கூறினார்.

click me!