சட்டப்பிரிவு 370ஐ நீக்கியதால் ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு புதுவாழ்வு கிடைத்துள்ளது: பிரதமர் மோடி பேட்டி

By SG Balan  |  First Published Apr 10, 2024, 8:14 PM IST

370வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு ஜம்மு காஷ்மீரில் நிலவும் மக்களுக்கு புதுவாழ்வு கிடைத்துள்ளது என்று அமெரிக்க இதழான நியூஸ் வீக்கிற்கு அளித்த பேட்டியில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.


பிரதமர் நரேந்திர மோடி, நியூஸ் வீக் ஊடக நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு ஜம்மு காஷ்மீரில் நிலவும் மக்களின் நிலை குறித்து பேசியிருக்கிறார். இந்திரா காந்திக்குப் பிறகு நியூஸ் வீக்கிற்கு பேட்டி அளித்துள்ள இந்தியப் பிரதமர் மோடி என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஊடக நிறுவனமான நியூஸ்வீக்கின் தலைமை நிர்வாக அதிகாரி தேவ் பிரகாத், உலகளாவிய தலைமை ஆசிரியர் நான்சி கூப்பர் மற்றும் ஆசியாவின் ஆசிரியர் குழு இயக்குனர் டேனிஷ் மன்சூர் பி ஆகியோருடன் பிரதமர் மோடி உரையாடி இருக்கிறார்.

Tap to resize

Latest Videos

சிறப்பு அந்தஸ்து நீக்கப்படுவதற்கு முன்பு காஷ்மீர் பள்ளத்தாக்கில் காணப்பட்ட வழக்கமான அமைதியின்மை குறித்துப் பேசிய பிரதமர், ஒரு காலத்தில் இயல்பு வாழ்க்கையை சீர்குலைத்த பந்த், போராட்டம், கல் வீச்சு ஆகியவை இப்போது கடந்த காலத்து கதையாக மாறிவிட்டன என்று கூறினார்.

மன்மோகன் சிங் எடுத்த முடிவுகளை மாற்றிய சோனியா காந்தி! யூ.பி.ஏ. ஆட்சி குறித்து ஆர்.கே. சிங் குற்றச்சாட்டு!

நியூஸ் வீக்கின் பத்திரிகையாளர்கள் குழுவை ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்குச் சென்று உண்மை நிலைமையைப் பற்றிய நேரடி அனுபவத்தைப் பெறலாம் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டிருக்கிறார்.

ஜம்மு காஷ்மீர் வாழ்வின் மற்ற அம்சங்களைப் பற்றிப் பேசிய பிரதமர் மோடி, "இங்கு நடத்தப்படும் விளையாட்டு நிகழ்வுகளில் இளைஞர்கள் உற்சாகமாகக் கலந்துகொள்கின்றனர் என்று குறிப்பிட்டார்.

“விளையாட்டு அங்குள்ள பல இளைஞர்களின் வாழ்க்கைப் பாதையாக பார்க்கப்படுகிறது. காஷ்மீரி பெண்களுக்கு ஒரு புதிய விடியல் உருவாகியுள்ளது, பெண்களும் ஆண்களைப் போலவே சம உரிமைகளை இப்போது அனுபவிக்கிறார்கள்” என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

ஜம்மு மற்றும் காஷ்மீர் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் அணுகக்கூடியதாக மாறியுள்ளது என்பதைப் பற்றிப் பேசிய மோடி, சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு, ஜம்மு காஷ்மீர் உலகளாவிய நிகழ்வுகளுக்கு ஏற்ற இடமாக மாறியுள்ளது என்றும் ஃபார்முலா 4 பந்தய நிகழ்வு, மிஸ் வேர்ல்ட் மற்றும் ஜி20 கூட்டங்கள் போன்ற குறிப்பிடத்தக்க கூட்டங்கள் நடந்துள்ளன என்றும் எடுத்துக்கூறினார்.

மோடியின் தலைமையின் கீழ் செய்யப்பட்ட முக்கிய பொருளாதார முன்னேற்றங்கள் முதல் உள்கட்டமைப்பு விரிவாக்கம் மற்றும் சீனாவுடனான இந்தியாவின் உறவு குறித்தும் பேட்டியில் பிரதமர் மோடி தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார். சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கான தீர்வுகள், பத்திரிகை சுதந்திரத்தை குறைப்பதாகக் கூறப்படும் விமர்சனங்கள், முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் எதிரான வெறுப்புப் பிரச்சாரம் ஆகியவை பற்றியும் பிரதமர் பதில் அளித்துள்ளார்.

டெல்லி அமைச்சர் ராஜ் குமார் திடீர் ராஜினாமா! ஆம் ஆத்மி கட்சியில் இருந்தும் விலகல்!

click me!