
இன்று ஏப்ரல் 11ம் தேதி வியாழக்கிழமை அன்று காலை, ஹரியானாவின் நர்னாலில் பள்ளி பேருந்து ஒன்று நிலை தடுமாறி கவிழ்ந்ததில், அதில் பயணம் செய்த 6 குழந்தைகள் பரிதாபமாக இறந்துள்ளனர். மேலும் அந்த வாகனத்தில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இன்று ஈத்-உல்-பித்ருக்கு (ரம்சான்) விடுமுறை இருந்தபோதிலும் பள்ளி இயங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜிஎல் பப்ளிக் பள்ளிக்குச் சொந்தமான அந்த பேருந்து கனினாவின் உன்ஹானி கிராமம் அருகே கவிழ்ந்தது.
முதற்கட்ட விசாரணையில், அந்த வண்டியின் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, அருகில் இருந்த மரத்தில் மோதியதாகத் தெரிகிறது என்று மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்தார். மேலும் அந்த ஓட்டுநர் குடிபோதையில் இருந்திருக்கலாம், என்றும் ஆவர் கூறினார்.
மாவட்ட நிர்வாகத்தின் தகவலின்படி, இந்த விபத்தில் காயமடைந்த 12 மாணவர்கள் உள்ளூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்றும், விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் இந்த பேருந்தின் பிட்னெஸ் சான்றிதழ் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2018லேயே காலாவதியானது என்று அதிகாரப்பூர்வ ஆவணங்கள் காட்டுகின்றன.
விடுமுறை நாளில் பள்ளி இயக்கப்பட்டது ஏன்? மற்றும் அந்த வாகனத்தின் ஓட்டுநர் குடிபோதையில் இருந்தாரா என்பது குறித்த விசாரணை நடந்து வருகின்றது. இறந்த 6 குழந்தைகை பார்த்து கதறி அழுத பெற்றோரின் குரல் அனைவரின் மதனை உலுக்கும் வண்ணம் இருந்தது. வண்டியும் முறையாக பராமரிக்கப்படாததை கருத்தில் கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடைக்காரர் முன்பே ஆடைகளை கழற்றும் பெண்.. அதிர்ச்சி வீடியோ.. கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..