
பெங்களூரில் இருந்து மாலே நோக்கிப் பறந்து கொண்டிருந்த கோ ஃபர்ஸ்ட் விமானம் கோயம்புத்தூரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 92 பயணிகளுடன் பெங்களூரில் இருந்து மாலத்தீவின் மாலே நோக்கிப் பறந்த கோ ஃபர்ஸ்ட் விமானம், பழுதான புகை எச்சரிக்கை காரணமாக, தமிழகத்தின் கோயம்புத்தூரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. என்ஜின்கள் அதிக வெப்பமடைந்ததாகக் கூறப்பட்ட பிறகு அலாரம் அணைக்கப்பட்டது. ஆனால் பொறியாளர்கள் அலாரம் பழுதடைந்துள்ளதாகவும், விமானம் பறக்கத் தகுந்ததாக இருப்பதாகவும் அறிவித்தனர். முன்னதாக பெங்களூரில் இருந்து விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, அலாரம் அடித்ததால், கோவை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்குவதற்கு விமானி அனுமதி கோரினார். விமானம் பகல் 12.57 மணிக்கு விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் இறக்கிவிடப்பட்டு, தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் இருந்தனர்.
இதையும் படிங்க: சூப்பர் அறிவிப்பு.. ஆதார் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள்.. யார் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? முழு விவரம்.
விமனத்தை ஆய்வு செய்த போது விமானத்தில் தீப்பிடித்ததற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. இரட்டை என்ஜின்கள் அதிக வெப்பமடைந்ததால் அலாரம் அடித்ததாகவும் அதனால் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது என்றும் கூறப்பட்டது. மேலும் பொறியாளர்கள் என்ஜின்களைச் சரிபார்த்து, அலாரத்தில் ஏதோ தவறு இருப்பதாக அறிவித்து, விமானம் பயணிக்கத் தகுதியானது என்று அறிவித்தனர். இதை அடுத்து சில நடைமுறைகளைப் பின்பற்றி விமானம் மாலேக்குப் புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம், வியாழன் மதியம் புறப்பட்ட சில நிமிடங்களில் கோ ஃபர்ஸ்ட் விமானம் பறவை தாக்கியதால் அகமதாபாத் திரும்பியது.
இதையும் படிங்க: ‘இந்தியா ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர்’: பேஸ்புக் பதிவால் சர்ச்சையில் சிக்கிய கேரள எம்எல்ஏ
கடந்த மாத தொடக்கத்தில், டெல்லி மற்றும் கவுகாத்தி இடையேயான கோ ஃபர்ஸ்ட் விமானத்தின் கண்ணாடியில் மோசமான வானிலை காரணமாக நடுவானில் விரிசல் ஏற்பட்டது. பல தொழில்நுட்ப கோளாறு சம்பவங்கள் பற்றிய அறிக்கைகளுக்குப் பிறகு, விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, இந்திய கேரியர்களின் தலைவர்களுடன் ஒரு சந்திப்பை நடத்தினார். பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க விமான நிறுவனங்களை மத்திய அமைச்சர் கேட்டுக் கொண்டார். சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ), விமானப் போக்குவரத்து கண்காணிப்பு அமைப்பானது, அடிப்படை மற்றும் போக்குவரத்து நிலையங்களில் உள்ள அனைத்து விமானங்களும் உரிமம் வைத்திருக்கும் ஊழியர்களுக்கு அவர்களின் நிறுவனத்தால் உரிய அங்கீகாரத்துடன் சான்றளித்து விடுவிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.