Independence day 2022 india: டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடிக்கு ‘புல்லட் ப்ரூப்’ வழங்கப்படுகிறதா?

By Pothy RajFirst Published Aug 12, 2022, 2:33 PM IST
Highlights

டெல்லி செங்கோட்டையில் வரும் 15ம் தேதி நாட்டின் 75-வது சுதந்திரதினத்தின் போது பிரதமர் மோடி குண்டு துளைக்காத கண்ணாடிக் கூண்டில் நின்று கொண்டு உரையாற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

டெல்லி செங்கோட்டையில் வரும் 15ம் தேதி நாட்டின் 75-வது சுதந்திரதினத்தின் போது பிரதமர் மோடி குண்டு துளைக்காத கண்ணாடிக் கூண்டில் நின்று கொண்டு உரையாற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நாட்டின் 75-வது சுதந்திரதினம் வரும் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த முறை சுதந்திரதினத்தை சிறப்பாகக் கொண்டாட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது, டெல்லிசெங்கோட்டையிலும் அதற்கான ஏற்பாடுகள் மிகவும் சுறுசுறுப்பாக நடந்து வருகின்றன.

மகாராஷ்டிராவி்ல் ஆளும் பாஜக அரசில் 75% அமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்கு:ஏடிஆர் அம்பலம்

டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றியபின், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். கடந்தகாலங்களில் பிரதமர் மோடிக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தாலும், அவர் அதையெல்லாம் கடந்து, உரையாற்றியபின்,  குழந்தைகளுடன் கைகுலுக்கி, சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவித்துச் செல்வார். 

ஆனால், இந்த முறை பிரதமர் மோடி சுதந்திரதின உரையாற்றும்போது, குண்டு துளைக்காத கண்ணாடிக் கூண்டில் இருந்து மக்களுக்கு உரையாற்றுவார் எனத் தெரிகிறது. இதற்கு முன் திறந்தவெளியில் நின்றுதான் பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார். ஆனால், இந்த முறை புல்லட் ப்ரூப் கூண்டில் நின்று மோடி பேசஉள்ளார் எனத் தெரிகிறது.

10 நாட்களில் ஒரு கோடி தேசியக் கொடி விற்று இந்தியா போஸ்ட் சாதனை

டெல்லி செங்கோட்டையில் ஊழியர்கள் குண்டு துளைக்காத கண்ணாடிக் கூண்டை நிறுவும் பணியில் இருப்பது தொடர்பாக புகைப்படத்தை சமீபத்தில் பிடிஐ செய்தி நிறுவனம் வெளியி்ட்டது. இதையடுத்து, பிரதமர்மோடி கண்ணாடிக் கூண்டில் இருந்து கொண்டு உரையாற்றுவார் எனத் தெரிகிறது. 
ஒருவேளை குண்டு துளைக்காத கண்ணாடிக் கூண்டில் நின்று பிரதமர் மோடி பேசினால் அதுதான் முதல்முறையாக இருக்கும். 

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டபின், அதன்பின் வந்த அனைத்து பிரதமர்களும் குண்டு துளைக்காத கண்ணாடிக்கூண்டுக்குள் நின்று கொண்டு பேசுவதை பாரம்பரியமாக இருந்து வருகிறது. கடந்த 1985ம் ஆண்டு இந்த குண்டு துளைக்காத கண்ணாடிக்கூண்டு வந்தது.

2022ம் ஆண்டின் கடைசி ‘சூப்பர் மூன்’ இன்று வானில் தெரியும்: பெயர் என்ன? தமிழகத்தில் பார்க்க முடியுமா?

அப்போது ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தார். அதன்பின் பிரதமராக இருந்த வி.பி.சிங், பி.வி.நரசிம்மராவ், மன்மோகன் சிங் ஆகியோரும் கண்ணாடிக் கூண்டில் இருந்தவாறு பேசினர். ஒவ்வொரு பிரதமருக்கு ஏற்பட கண்ணாடிக் கூண்டு பல்வேறு மாற்றங்களுடன் வந்துள்ளது.

டெல்லி செங்கோட்டையில் எந்த அசம்பாவிதமும் நடக்கக்கூடாது என்பதற்காக செங்கோட்டையைச் சுற்றி 10ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

click me!