‘இந்தியா ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர்’: பேஸ்புக் பதிவால் சர்ச்சையில் சிக்கிய கேரள எம்எல்ஏ

By Pothy RajFirst Published Aug 12, 2022, 3:42 PM IST
Highlights

ஜம்மு காஷ்மீரை, இந்தியா ஆக்கிரமித்துள்ளது என்றும், பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரின் ஒருபகுதி ஆசாத் காஷ்மீர்(சுதநதிரமான காஷ்மீர்) என்று கேரள எம்எல்ஏ கேடி ஜலீல் சர்ச்சைக்குரிய வகையில் பேஸ்புக்கில்  பதிவிட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீரை, இந்தியா ஆக்கிரமித்துள்ளது என்றும், பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரின் ஒருபகுதி ஆசாத் காஷ்மீர்(சுதநதிரமான காஷ்மீர்) என்று கேரள எம்எல்ஏ கேடி ஜலீல் சர்ச்சைக்குரிய வகையில் பேஸ்புக்கில்  பதிவிட்டுள்ளார்.

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக பினராயி விஜயன் உள்ளார். இந்த அரசில் முன்னாள் அமைச்சராக இருந்தவர் தவணூர் எம்எல்ஏ கேடி ஜலீல். முதல்வர் பினராயி விஜயனுக்கு ஜலீல் நெருங்கிய நட்புகொண்டவர் எனக் கூறப்படுகிறது.

டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடிக்கு ‘புல்லட் ப்ரூப்’ வழங்கப்படுகிறதா?

இந்நிலையில் எம்எல்ஏ கே.டி. ஜலீல் பேஸ்புக்கில் பதிவிட்ட ஒரு கருத்து சர்ச்சையாக மாறியுள்ளது. அதில் அவர் கூறுகையில் “ காஷ்மீர் அதன் அழகை இழந்துவிட்டது. எங்குபார்த்தாலும் ராணுவ வீரர்கள்தான் இருக்கிறார்கள். புன்னகையை காஷ்மீர்  மறந்துவிட்டது. அனைத்து அரசியல் தலைவர்களும் வீட்டுக் காவலில் உள்ளனர். 2-வதுமுறையாக வந்த மோடி அரசு, காஷ்மீரை 3 பிரிவுகளாக பிரி்த்துவிட்டது. 

 காஷ்மீருக்கு அளித்துவந்த 370 சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்தது மோடி அரசு. ரத்துசெய்யப்பட்ட நோக்கத்தை அது நிறைவேற்றுமா. காஷ்மீரின் ஒருபகுதி பாகிஸ்தானுடன் இருக்கிறது, இதற்கு பெயர் ஆசாத் காஷ்மீர். அந்தப் பகுதி நேரடியாக பாகிஸ்தான் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. ஜம்மு காஷ்மீரை, இந்தியா ஆக்கிரமித்துள்ளது

நெருங்கும் சுதந்திரதினம்: டெல்லியில் 2 ஆயிரம் தோட்டாக்கள் கண்டுபிடிப்பு: பாதுகாப்பு தீவிரம்

அங்கு கரன்ஸி மற்றும் ராணுவத்தை பாகிஸ்தான் அரசுதான் கட்டுப்படுத்துகிறது. ஆசாத் காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் இருக்கிறது. ஜியாவுல் ஹக் காலத்தில் உருவாக்கப்பட்ட ராணுவம்தான் இங்கு கட்டுப்படுத்துகிறது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்தப் பதிவு சமூக வலைத்தளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பாஜக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக செய்தித்தொடர்பாளர் சந்தீப் வாரியர் , கேடி ஜலீலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

சந்தீப் வாரியர் கூறுகையில் “ இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஆசாத் காஷ்மீரா. ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருபகுதி என்று நாடாளுமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மக்கள் பிரதிநிதியாக இருப்பவர், முன்னாள் அமைச்சாராகிய நீங்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் விவகாரத்தில் இந்திய நிலைப்பாட்டை ஏற்கவில்லையா? பாகிஸ்தானை ஜலீல் புனிதப்படுத்துகிறார். ஆசாத் காஷ்மீர் என்று அழைக்கப்படும் பகுதியில் ஒரு பகுதியை பாகிஸ்தான் சீனாவுக்கு வழங்கியது. 

2022ம் ஆண்டின் கடைசி ‘சூப்பர் மூன்’ இன்று வானில் தெரியும்: பெயர் என்ன? தமிழகத்தில் பார்க்க முடியுமா?

காஷ்மீரின் ஒரு பகுதி இயற்கையாகவே பாகிஸ்தானுடன் இணைக்கப்படவில்லை, அது பாகிஸ்தான் ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டது, இந்திய ராணுவ நடவடிக்கை இல்லையென்றால் முழு காஷ்மீரையும் ஆக்கிரமித்திருப்பார்கள்” எனத் தெரிவித்தார்.

click me!