தமிழகத்திற்கு வருகிறதா ஜெர்மனி முதலீடு; டெல்லி பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது?

By Dhanalakshmi GFirst Published Jun 7, 2023, 1:30 PM IST
Highlights

டெல்லிக்கு ஜெர்மனி பாதுகாப்புத்துறை அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் அரசு முறை பயணமாக வந்து இருக்கிறார்.

சீனாவை பாதுகாப்புத்துறை தளவாடங்களுக்கு நம்பி இருக்காமல் இந்தியாவில் அதிகளவில் முதலீடு செய்யுமாறு ஜெர்மனியை தொடர்ந்து இந்தியா வலியுறுத்தி வந்தது. அதேசமயம் சீனாவுடன் பாகிஸ்தான் நெருக்கம் காட்டி வருவதால் இந்த விஷயத்தில் பாகிஸ்தானையும் நம்ப வேண்டாம் என்று இந்தியா எடுத்துரைத்தது. இந்த நிலையில் டெல்லிக்கு ஜெர்மனி பாதுகாப்புத்துறை அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் வந்து இருக்கிறார்.  

நேற்று டெல்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ஜெர்மனி பாதுகாப்புத்துறை அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதற்குப் பின்னர் அறிக்கை வெளியிட்டு இருந்த ராஜ்நாத் சிங், ''இந்தியாவில் கிடைக்கும் மனித உழைப்பு, விலைவாசி குறைவு மற்றும் ஜெர்மனியின் உயர் தொழில்நுட்பமும் இணைந்து இந்தியாவில் அந்த நாடு முதலீடு செய்வதற்கான வாய்ப்பு உள்ளது. இது இருநாடுகளின் உறவை அதிகரிக்கும்'' என்று குறிப்பிட்டு இருந்தார். 

மழைக்காலத்தில் விவசாய நிலத்தில் வைர வேட்டை! அனந்தப்பூர், கர்னூலில் அதிசய நிகழ்வு

இந்த அறிக்கையில் நீர்மூழ்கிக் கப்பலுக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகுமா? என்பது குறித்து குறிப்பிடவில்லை என்றாலும் அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தெரிய வந்துள்ளது. ராணுவ தளவாடங்கள் தயாரிப்பதற்கு என்று உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஜெர்மனியின் முதலீடு இந்த இரண்டு மாநிலங்களிலும் செய்யப்படும் என்று தெரிய வந்துள்ளது. இதற்கான பிரதிநிதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படும் என்று கூறப்படுகிறது. 

IRCTC : இந்திய ரயில்வேயின் பாரத் கவுரவ் ஆன்மீக யாத்திரை ரயில் பற்றி தெரியுமா.?

அதேசமயம் இந்தியாவுக்கான ஆறு மறைந்திருந்து தாக்குதல் நடத்தும் நீர்மூழ்கிக் கப்பல்களை ஜெர்மனி தயாரிக்கும் என்று கூறப்படுகிறது. ஜெர்மனி நீர்மூழ்கிக் கப்பல் தயாரிப்பாளரும், இந்திய பொதுத்துறை நிறுவனமான மசகான் டாக் லிமிடெட் (எம்.டி.எல்.) நிறுவனம் 5.8 பில்லியன் டாலர் (ரூ. 42,000 கோடி) செலவில் ஆறு நீர்மூழ்கிக் கப்பல்களை தயாரிக்க கைகோர்க்க இருக்கின்றன என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

click me!