மழைக்காலத்தில் விவசாய நிலத்தில் வைர வேட்டை! அனந்தப்பூர், கர்னூலில் அதிசய நிகழ்வு

By SG BalanFirst Published Jun 7, 2023, 10:58 AM IST
Highlights

அனந்தப்பூர் மற்றும் கர்னூல் மாவட்ட எல்லையில் உள்ள குண்டக்கல் மற்றும் பதிகொண்டா பகுதிகளுக்கு இடையே உள்ள விவசாய வயல்களில் ஒவ்வொரு பருவமழைக்கும் ஒரு அதிசயம் இந்த முறையும் நிகழ்ந்துள்ளது.

அனந்தப்பூர் மற்றும் கர்னூல் மாவட்ட எல்லையில் உள்ள குண்டக்கல் மற்றும் பதிகொண்டா பகுதிகளுக்கு இடையே உள்ள விவசாய நிலங்களில் ஒவ்வொரு பருவமழைக்கும் நடக்கும் அதிசயம் இந்த முறையும் நிகழ்ந்துள்ளது. வறண்ட நிலங்கள் விலையுயர்ந்த வைரங்களைத் தந்துள்ளன.

கர்னூல் மாவட்டத்தில் உள்ள மடிகேராவில் பாசினேபள்ளியில் காரீப் பருவத்திற்கான விவசாயப் பணிகளில் ஈடுபட்டிருந்த ஒரு விவசாயிக்கு பெரிய வைரம் ஒன்று கிடைத்தது. அதை அவர் ரூ.2 கோடிக்கு விற்றிருக்கிறார். வணிகர்கள் சிண்டிகேட் அமைத்து விற்றதால், அதைப்பற்றி எந்த புகாரும் இல்லை என்று வருவாய் மற்றும் காவல்துறையினர் கூறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜயநகரப் பேரரசின் ஆட்சிக் காலத்தின்போது ராயலசீமா விலைமதிப்பற்ற கற்கள் மற்றும் வைரங்களை வர்த்தகம் செய்தது. அன்றைய காலத்தில் ஹம்பி மார்க்கெட்டில் வைரங்கள் காய்கறிகள் போல் விற்கப்பட்டன என்று சொல்லப்படுகிறது.

சென்னை ஆவடியில் முதல் பெண் போக்குவரத்து காவலரான சுஜிதா

கர்னூல் மற்றும் அனந்தபூர் மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் வைரத்தை வேட்டையாடுபவர்களின் விருப்பமான இடங்களாக உள்ளன. துக்கலி, ஜொன்னகிரி, கர்னூலில் உள்ள மட்டிகெரே மற்றும் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள வஜ்ரகரூர் ஆகிய இடங்களில் உள்ள வறட்சியான பகுதிகளில் பல ஆண்டுகளாக மழைக்காலத்தில் விலைமதிப்பற்ற கற்கள் கிடைத்துவருகின்றன.

மட்டிகேரா மண்டலத்தில் உள்ள பாசினேபள்ளி கிராமத்தில் விவசாயம் செய்து கொண்டிருந்த விவசாயி ஒருவர் பெரிய வைரத்தை கண்டெடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் விவசாயியுடன் ஒப்பந்தம் செய்து அந்த வைரத்தை ரூ.2 கோடிக்கு வாங்கினார்கள் என்றும் இந்த ஆண்டு சீசனில் இதுவே முதல் முறையாகக் கிடைத்த வைரம் என்று சொல்கிறார்கள்.

இதனை அறிந்த ஆந்திரா மற்றும் தெலுங்கானாவைச் சேர்ந்த பலர் தங்கள் அதிர்ஷ்டத்தை சோதித்துப் பார்க்க இந்தப் பகுதிகளுக்கு வைர வேட்டைக்குச் செல்கின்றனர். பிரத்தியேகமாக பருவமழை காலத்தில் வறண்ட நிலங்களின் மேற்பரப்பில் விலைமதிப்பற்ற கற்கள் எவ்வாறு தோன்றும் என்பது குறித்து எந்த ஆராய்ச்சியும் நடத்தப்படவில்லை. சுரங்கம் மற்றும் புவியியல் துறை அதிகாரி ஒருவர் இதுபோன்ற பகுதிகளில் ஆராய்ச்சி நடந்தவேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

Weather Update: அரபிக்கடலில் பிபார்ஜாய் புயல்! சூறாவளியுடன் மழை பெய்ய வாய்ப்பு... எங்கெல்லாம் தெரியுமா?

2019ஆம் ஆண்டில், ஒரு விவசாயி 60 லட்சம் ரூபாய்க்கு ஒரு வைரத்தைக் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது. 2020ஆம் ஆண்டில், இரண்டு கிராமவாசிகள் 5 லட்சம் மற்றும் 6 லட்சம் மதிப்புள்ள இரண்டு விலையுயர்ந்த கற்களைக் கண்டுபிடித்து உள்ளூர் வியாபாரிகளுக்கு முறையே ரூ.1.5 லட்சம் மற்றும் ரூ.50,000 க்கு விற்றனர் எனவும் சொல்கிறார்கள்.

கடந்த ஆண்டு ஒருவர் தனக்குக் கிடைத்த விலை உயர்ந்த கற்களை ரூ.40 லட்சத்துக்கு கொடுத்தாராம். ஜோனகிரி பகுதியில் மற்றொரு நபர் 30 காரட் வைரத்தைக் கண்டுபிடித்து உள்ளூர் வியாபாரிக்கு ரூ.1.2 கோடிக்கு விற்றராம். இவ்வாறு செய்திகள் உலவுவதால், பலநூறு பேர் தங்கள் அன்றாட வேலைகளை விட்டுவிட்டு, வைரங்கள் நிறைந்த கிராமங்களில் தற்காலிக கூடாரம் அமைத்துத் தங்கியுள்ளனர்.

ஆனால், வருவாய்த்துறை அதிகாரிகளோ, காவல்துறை அதிகாரிகளோ இதுகுறித்து விசாரிப்பதில் அக்கறை காட்டவில்லை. உள்ளூர் மற்றும் வெளியூர்களைச் சேர்ந்த வியாபாரிகள், இடைத்தரகர்கள் உதவியுடன் பேரம் பேசி வைர விறப்னை நடக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள கூடி நகரம் வைரம் வேட்டையாடுபவர்களின் புகலிடமாக மாறியுள்ளது. இந்த ஆண்டு சீசனுக்காக பல வணிகர்கள் லாட்ஜ்களில் தங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஒடிசா விபத்துக்குப் பின் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் இன்று முதல் மீண்டும் இயக்கம்

click me!