உலகளாவிய நிர்வாகத்திற்கான மிக முக்கியமாஎன அமைப்புகளில் ஒன்றான G20 உச்சி மாநாட்டை முதல்முறையாக இந்தியா நடத்துவதால், அனைவரின் பார்வையும் இந்தியா மீது திரும்பி உள்ளது.
உலக நாடுகள் ஒருங்கிணைந்து பல விஷயங்களை செயல்படுத்த பிரிக்ஸ், ஆசியான் போன்ற அமைப்புகளை உருவக்கி உள்ளன. அந்த வகையில் G20 அமைப்பு சக்திவாய்ந்த அமைப்புகளில் ஒன்றாக உள்ளது. இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இத்தாலி, இங்கிலாந்து, அர்ஜெண்டினா, சவுதி அரேபியா, ஜப்பான், மெக்சிகோ, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, பிரேசில், கனடா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், தென் கொரியா, இந்தோனேசியா, ஐரோப்பிய யூனியன் ஆகிய 20 நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன.
G20 உச்சி மாநாடு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும். இந்த மாநாட்டில் சர்வதேச பொருளாதார சிக்கல்கள் குறித்து வளர்ந்த நாடுகளும், வளரும் நாடுகளும் கலந்து ஆலோசிக்கும். அதன்படி இந்த ஆண்டு இந்தியா தலைமையில் ஜி20 மாநாடு நடைபெற உள்ளது.
undefined
உலகளாவிய நிர்வாகத்திற்கான மிக முக்கியமாஎன அமைப்புகளில் ஒன்றான G20 உச்சி மாநாட்டை முதல்முறையாக இந்தியா நடத்துவதால், அனைவரின் பார்வையும் இந்தியா மீது திரும்பி உள்ளது. இந்த ஆண்டு, G20 உச்சி மாநாட்டில் “ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்' என்ற கருப்பொருளை இந்தியா உருவாக்கி உள்ளது.
டெல்லியில் பிரகதி மைதானத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாரத் மண்டபத்தில் இந்த G20 உச்சி மாநாட்டின் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இந்தியா வந்துள்ளனர். அமெரிக்க அதிபர் ஜோ பிடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், வங்க தேச அதிபர் ஷேக் ஹசீனா உள்ளிட்டோர் நேற்றே டெல்லிக்கு வந்துவிட்டனர்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சீன அதிபர் ஷி ஜின்பிங், மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் மேனுவல் லோபஸ் ஆகியோர் இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை. எனினும் ரஷ்ய அமைச்சர், சீன பிரதமர் இதில் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.
பருவநிலை மாற்றம், நிலையான வளர்ச்சி இலக்குகள், தொழில்நுட்ப மாற்றம், பலதரப்பு நிறுவனங்கள், பெண்கள் தலைமையிலான வளர்ச்சி ஆகியவை குறித்து இந்த G20 உச்சி மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. பல உலக தலைவர்கள் பங்கேற்பதால் டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் அத்தியாவசிய சேவை தவிர மற்ற அனைத்து போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ள