தயிர் பாக்கெட்டில் தஹி என அச்சிட வேண்டாம்... கடும் எதிர்ப்பை அடுத்து முடிவை வாபஸ் பெற்றது மத்திய அரசு!!

By Narendran SFirst Published Mar 30, 2023, 7:56 PM IST
Highlights

கடும் எதிர்ப்புகளும் கண்டனங்களும் எழுந்த நிலையில் ஆவின் தயிர் பாக்கெட்டில் தஹி என்று அச்சிட வேண்டும் என்ற உத்தரவை இந்திய உணவுத் தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் வாபஸ் பெற்றுள்ளது. 

கடும் எதிர்ப்புகளும் கண்டனங்களும் எழுந்த நிலையில் ஆவின் தயிர் பாக்கெட்டில் தஹி என்று அச்சிட வேண்டும் என்ற உத்தரவை இந்திய உணவுத் தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் வாபஸ் பெற்றுள்ளது. ஆவின் தயிர் பாக்கெட்டில் தஹி என்று அச்சிட வேண்டும் என இந்திய உணவுத் தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் வலியுறுத்தியது. இதற்கு ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்தன. மேலும் இதற்கு தமிழகமும் எதிர்ப்பு தெரிவித்தது. தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் இந்த விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ராகுல் விவகாரத்தில் அமித்ஷா தொடர்ந்து பொய்களை கூறி வருகிறார்… மல்லிகார்ஜுன் கார்கே சாடல்!!

குறிப்பாக தமிழக முதல்வர் இந்த விஷயத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இதுக்குறித்த அவரது பதிவில், எங்கள் தாய்மொழியைத் தள்ளிவைக்கச் சொல்லும் இந்திய உணவுத் தரக் கட்டுப்பாட்டு நிறுவனம், தாய்மொழி காக்கும் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள்! மக்களின் உணர்வுகளை மதியுங்கள்! #StopHindiImposition குழந்தையைக் கிள்ளிவிட்டுச் சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம்! தொட்டிலை ஆட்டும் முன்னர் தொலைந்து விடுவீர்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல ஆவின் தயிர் பாக்கெட்டில் தஹி என அச்சிட முடியாது என்று பால்வளத்துறை அமைச்சர் நாசரும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: புதிய நாடாளுமன்றத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி... பணிகள் குறித்து கட்டிட தொழிலாளர்களுடன் கலந்துரையாடல்!!

இவ்வாறு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புகளும் கண்டனங்களும் எழுந்த நிலையில் ஆவின் தயிர் பாக்கெட்டில் தஹி என்று அச்சிட வேண்டாம் என்று இந்திய உணவுத் தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏராளமான கோரிக்கைகள் எழுந்ததை அடுத்து, Curd (Dahi) அல்லது  Curd (Mosaru) அல்லது Curd (Zaamut daud) அல்லது Curd (Perugu) அல்லது Curd (தயிர்) என்று பயன்படுத்திக் கொள்ளலாம் என்று என்று இந்திய உணவுத் தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.  

click me!