From The India Gate: ஹாசன் பவானியின் எழுச்சியும் சித்தராமையாவை மாற்றிய நிகழ்ச்சியும்

By SG Balan  |  First Published May 7, 2023, 3:27 PM IST

ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கின் மகத்தான நெட்வொர்க் நாடு முழுவதும் உள்ள அரசியல் மற்றும் அதிகாரத்தின் நாடித் துடிப்பை தட்டிக் கேட்க உதவுகிறது, நகைச்சுவை கலந்த செய்திகளையும் வழங்கி வருகிறது. இவற்றை ஒரு தொகுப்பாக‘ஃப்ரம் தி இந்தியா கேட்’ மூலம் வழங்குகிறோம். இன்று இதோ உங்களுக்கான 25வது எபிசோட்.


கட்டிப்பிடி வைத்தியம்

வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் கட்டிப்பிடி வைத்தியத்தை கர்நாடக தேர்தல் களத்தில் ராகுல் காந்தியும் பின்பற்றி இருக்கிறார். இதனால் சித்தராமையா கோலார் தொகுதியிலும் போட்டியிடும் தனது கனவைக் கொஞ்சம் மறந்திருக்கிறார்.
அவர் ஏன் வருணா தொகுதியில் மட்டும் போட்டியிடுவதுடன் நிறுத்திக்கொண்டார் என்பதற்குக் காரணம் தெரியாமல் இருந்தது. ஆனால், ஒரு செய்தியாளர் சந்திப்பின்போது அவர் அதுபற்றிக் கூறினார்.

Tap to resize

Latest Videos

ஒரு பையன் தன்னைக் கட்டிப்பிடித்து “கோலார் வேண்டாம்” என்று கூறியதாக அவர் குறிப்பிட்டார். அந்தப் பையனுக்கு என்ன பதில் சொன்னார் என்று கூறவில்லை. ஆனால் அதற்குப் பின் அவர் வருணா தொகுதியில் போட்டியிடுவது போதும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார். சித்தராமையா சொன்ன அந்த பையன் ராகுல் காந்திதான்!

ராகுல் காந்தி இதற்கு முன்பும் நாடாளுமன்றத்தில் நமோவைக் கட்டிப்பிடித்து சிரிப்பலைகளை உருவாக்கியதும் நினைவுக்கு வரக்கூடும்.

கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து துறைகளில் தமிழ்நாடு முன்னேறியது எப்படி?

சிசிடிவி மோசடி

கேரள சாலைகளில் செயற்கை நுண்ணறிவு கேமராக்களை நிறுவும் திட்டத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஊழல் நடந்ததாகக் கூறப்படுவது குறித்து இடதுசாரி அரசாங்கம் மௌனம் காப்பது சாமானியரின் மனதில் கேள்விகளை எழுப்புகிறது.

முதலமைச்சரின் நெருங்கிய உறவினர்கள் மீதான பல குற்றச்சாட்டுகளைப் போல இதையும் விசாரணைக்கு உட்படுத்த எதிர்க்கட்சிகளும் முயற்சி செய்கின்றன.

ஆனால் எதிர்க்கட்சிகளுக்குள் இருக்கும் பூசல்கள் காரணமாக ஆளும் கட்சிக்கு எதிராக தாக்கத்தை உருவாக்கும் முயற்சிகள் தோல்வியடைகின்றன. காங்கிரஸின் அனைத்து உயர்மட்டத் தலைவர்களும் தனித்தனியாக ஆதாரங்களை வெளியிட  பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்தி வருகின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் ஆதாரங்களுடன் வருவதற்கு முன்பே, முக்கியத் தலைவர் ரமேஷ் சென்னிதலா தனது ஆவணங்களை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து கேபிசிசி தலைவர் கே.சுதாகரன், ஊடகங்களைச் சந்தித்து அரசு எச்சரிக்கை விடுத்தார்.

ஆனால் அரசாங்கம் தொடர்ந்து அனைத்து குற்றச்சாட்டுகளையும் புறக்கணிக்கிறது. இந்த மோசடிக்குக் குற்றச்சாட்டுக்கு எதிராக எந்தவொரு கூட்டுப் போராட்டத்தையும் கேரளா இன்னும் காணவில்லை.

பாஜகவைச் சேர்ந்த சோபா சுரேந்திரன் மாநிலத் தலைமையைப் பொருட்படுத்தாமல் தனித்து செயல்பட்டு வருவது கேரள பாஜகவும் பிளவுபட்டிருப்பது போன்ற தோற்றத்தை அளிக்கிறது. உள் மோதல்கள் ஒவ்வொரு அரசியல் கட்சியையும் பாதித்து வருவதால், இந்த தொடர் குற்றச்சாட்டுகளில் இருந்து ஆளும் கட்சி தப்பிக்க வாய்ப்புள்ளது. சிசிடிவி மோசடி தொடர்பாக எதிர்க்கட்சிகள் வேலைநிறுத்தம் போன்ற போராட்டங்களில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை.

தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மழை பெய்யும்? வானிலை மையம் தகவல்

கியூபா மாடல்

கியூபாவின் பிளேட்டோ சோசலிச மாதிரியிலிருந்து கற்றுக்கொள்ளும் எந்த வாய்ப்பையும் கேரள அரசு தவறவிடுவதில்லை. சுகாதாரத்துறையிரல் கொசு ஒழிப்பக்கு கியூபா மாடலைப் பின்பற்றியது வரை கேரள அரசு எடுத்துக்கொண்ட எந்த கியூபா மாடலும் விரும்பிய பலனைத் தரவில்லை.

மாறாக, சுகாதாரத்துறையில் அதுபோன்ற மாடலைக் கொண்டுவந்தது தோல்வியிலேயே முடிந்திருக்கிறது. திருவனந்தபுரத்தில் இதுபோன்ற ஒரு முயற்சியால், அங்குள்ள அரசு மருத்துவமனை மக்களுக்கு பயனற்றதாக ஆகிவிட்டது.
இதேபோல், கொசுக்களை ஒழிப்பதற்கான கியூபா மாடலும், மருந்துகளுக்கு ஆகும் பெரும் செலவு காரணமாக ஆரம்பக் கட்டத்தையே தாண்ட முடியவில்லை.

இதையெல்லாம் மீறி, முதலமைச்சரும், சுகாதார அமைச்சரும் கியூபாவிடம் இருந்து மேலும் பலவற்றைக் கற்க ஆவலாக உள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் முதலீட்டாளர்கள் சந்திப்பில் பங்கேற்கச் செல்வது தொடர்பான முதல்வரின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்ததன் எதிர்விளைவுகள்தான் இந்த நடவடிக்கை எனக் கூறப்படுகிறது. பார்க்கிறார்கள்.

கம்யூனிச காதல் காரணமாகத்தான் கியூபா மாதிரியை பின்பற்ற முயல்கிறார்கள் என மற்றொரு தரப்பு கூறுகிறது. முழு விவரம் தெரியும் வரை எல்லாம் முதல்வரின் நடவடிக்கையாகவே பார்க்கப்படும்.

மணிப்பூரில் என்ன நடக்கிறது? மேலும் படைகள் குவிப்பு, முதல்வர் அவசர ஆலோசனை... முழு விவரம்

மருமகளின் சக்தி 

முன்னாள் பிரதமர் எச். டி. தேவகவுடாவின் மருமகள் பவானி ரேவண்ணாவின் பார்வை எப்போதும் ஹாசன் தொகுதியின் மீதுதான். ஆனால் கட்சி அந்தத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை ஸ்வரூப் பிரகாஷுக்கு கொடுத்த பிறகு, பவானியிடம் மாற்றம் தெரிகிறது.

ஸ்வரூப் வேட்புமனு தாக்கல் செய்யும் போது அவரும் உடன் இருந்தார். பவானி ஸ்வரூப்பை ‘குடும்பத்தில் ஒருவர்’ என்று அழைத்து பிரச்சாரம் செய்துவருகிறார். இந்தப் பிரச்சாரம் மூலம் மக்கள் மத்தியில் பவானியின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. மேலும் அவர் மாநிலத்தின் பிற பகுதிகளிலும் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

பவானி ஏற்கனவே ஜில்லா தலைவராக தனது நிர்வாகத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். தேவகவுடாவிடம் அவருக்கு இருக்கும் செல்வாக்கு பற்றியும் கட்சியினருக்கு நன்றாகத் தெரியும். திறமை, விடாமுயற்சி ஆகியவற்றைக் கொண்டிருக்கும் பவானி ஜேடிஎஸ் கட்சிக்குள் ஒரு தலைவராக உருவாக வாய்ப்பு உள்ளது. அது எப்படி பலன் கொடுக்கிறது என்பதை 2024 மக்களவைத் தேர்தலில் பார்க்கலாம்.

ஈபிஎஸ் மீது 3 பிரிவுகளில் வழக்கு! சொத்து மதிப்பை குறைத்துக் கூறியது தொடர்பான வழக்கில் நடவடிக்கை

2000 கோடி எங்கே?

ராஜஸ்தானில் புதிய மாவட்டங்களின் வளர்ச்சிக்காக ஒதுக்கீடு செய்வதாக அறிவிக்கப்பட்ட தொகைதான் இந்த 2,000 கோடி ரூபாய். ராஜஸ்தானின் சில மாவட்டங்களில் உள்ள மக்கள் அதை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையில், அரசாங்கப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு அப்படி ஒரு வாக்குறுதியை அளித்து பற்றி நினைவில் வைத்திருப்பதாகத் தெரியவில்லை.
முதல்வர் அசோக் கெலாட் கூட இது குறித்து மவுனம் காத்து வருகிறார்.

இந்த கேள்விக்கு பயந்து பல அமைச்சர்கள் பொதுக்கூட்டங்களில் பங்கேற்பதை நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால், மாவட்டங்களைச் மேம்படுத்துவதாக அறிவித்தது தொடர்பாக ஒரு கோடு கூட போடப்படவில்லை என்று அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த அறிவிப்பு தொடர்பாக ஏதேனும் நடவடிக்கையை களத்தில் காணும் வரை கெலாட்டும் சக ஊழியரும் ஒளிந்துகொண்டே இருக்க வேண்டியதுதான்.

ஏன் இன்னும் ஒரு ஏலியனைக்கூட கண்டுபிடிக்க முடியவில்லை? சுவிஸ் விஞ்ஞானிகள் ஆய்வில் விளக்கம்

சிறையில் கொள்ளை

ராஜஸ்தானில் உள்ள சிறைக் கைதிகள் சிறை வளாகத்தில் காய்கறி தோட்டம் ஒன்றை வளர்த்துள்ளனர். இந்த தோட்டத்தில் உள்ள ஆர்கானிக் பொருட்கள், சிறை அதிகாரி ஒருவரின் கதையை விவரிக்கின்றன. அவர்தான் சிறைக் கைதிகளை காய்கறி தோட்டம் போடும் பணியில் ஈடுபடுத்தினார்.

ஆனால் அவரது இடத்தைப் பிடித்த ஒரு புதிய அதிகாரி இன்னொரு ஐடியாவுடன் வந்திருக்கிறார். அவர் தனது குடும்பத்திற்கு பூச்சிக்கொல்லி இல்லாத ஆர்கானிக் காய்கறிகள் கிடைப்பதற்கு வழி செய்துகொண்டிருக்கிறார். அதாவது, சிறையில் அறுவடையாகும் காய்கறிகளை அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லத் தொடங்கியுள்ளார். இதனால் சிறைத் தோட்டத்தின் விளைச்சல்கள் எல்லாம் அவரது வீட்டு சாப்பாட்டு மேசைக்குச் செல்வதாகச் சொல்லப்படுகிறது.

அவரது இந்தக் கொள்ளையைப் பார்த்துவரும் கைதிகள் ‘வானத்துப் பறவைகள் விதைப்பதும் இல்லை, அறுவடை செய்யவதும் இல்லை...’ என்று பைபிள் வாசகத்தைச் சொல்லி குற்றம்சாட்ட முடியாது.

ஏவிஎம் ஸ்டுடியோவில் புதிய ம்யூசியம்… முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்; கமல், சிவகுமார் பங்கேற்பு

click me!