
ஆன்லைனில் கிளிக் அல்லது லைக் செய்தால் பணம் என்ற பெயரில் 6 லட்சம் பேரை ஏமாற்றி ரூ. 3,700 கோடி மோசடி செய்ததாக உத்தரப்பிரதேசத்தைச் சோ்ந்த பொறுயபளர் உட்பட 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் அப்ளேஸ் இன்போ சொல்யூசன்ஸ் என்ற தனியார் நிறுவனம் socialtrade.biz என்னும் இணைய தளத்தில், ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரை கட்டி உறுப்பினராகுமாறு அழைப்பு விடுத்திருந்தது.
உறுப்பினரான பின்னர் இணைய தளம் அனுப்பும் லிங்க்கை கிளிக் செய்தால், ஒவ்வொரு கிளிக்கிற்கும் 5 ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை நம்பி ஏமாந்து பணம் கட்டிய 6 லட்சத்திற்கும் மேற்பட்டோரை ஏமாற்றி, ரூ. 3,700 கோடி வரை சுருட்டப்பட்டுள்ளது.
இணைய தளத்தின் பெயரை அவ்வப்போது மாற்றி நடத்தப்பட்ட இந்த ஆன்லைன் மோசடி தொடர்பாக, உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் அனுபவ் மிட்டல், ஸ்ரீதர் பிரசாத், மகேஷ் தயாள் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அப்ளேஷ் இன்ஃபோ சொல்யூஷன்ஸ் ((Ablaze Info Solutions Pvt Ltd)) என்ற பெயரில் நிறுவனத்தை உருவாக்கி மோசடியில் ஈடுபட்ட இந்த 3 பேரிடமிருந்தும் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியுள்ள போலீஸார், வங்கிக் கணக்கிலிருந்த தொகை 500 கோடி ரூபாயையும் முடக்கியுள்ளனர்.
அந்நிறுவனத்தில் சோதனை நடத்திய போலீசார், 250 பாஸ்போர்ட்களை பறிமுதல் செய்தனர்.