குடியரசு தலைவர் மாளிகையில் திடீர் தீ விபத்து – ஆவணங்கள் எரிந்து நாசம்

 
Published : Feb 03, 2017, 12:06 PM ISTUpdated : Sep 19, 2018, 03:03 AM IST
குடியரசு தலைவர் மாளிகையில் திடீர் தீ விபத்து – ஆவணங்கள் எரிந்து நாசம்

சுருக்கம்

டெல்லி குடியரசு தலைவர் மாளிகை உள்ளது. இங்கு குடியரசு தலைவராக பதவியில் உள்ளவர்கள், தங்குவது வழக்கம். மேலும் குடியரசு தலைவர்களின் அலுவலகமும் அதே கட்டிடத்தில் செயல்படுகிறது.

இந்நிலையில், இன்று காலை குடியரசு தலைவர் அலுவலக கணக்குப்பிரவு கட்டிடத்தில் இருந்து திடீரென கரும்புகை வந்தது. இதை பார்த்ததும், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு தீப்பற்றி எரிந்தது.

உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், சில நிமிடங்களில் தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. ஆனால், அங்கிருந்து சோபா, சேர், நாற்காலி, கம்ப்யூட்டர் மற்றும் ஆவணங்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.

மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

PREV
click me!

Recommended Stories

7 மணி ஆனா ஊரே ஆஃப் ஆயிடும்! தினமும் 2 மணி நேரம் டிஜிட்டல் விரதம் இருக்கும் வினோத கிராமம்!
டெல்லியில் 5 ரூபாய்க்கு அறுசுவை உணவு! அடல் கேன்டீனில் தடபுடல் மெனு!