"கறுப்பா,அசிங்கமா,ஊனமுற்ற பெண்கள் தான் அதிக வரதட்சனை கொடுக்க வேண்டுமாம்" - சொல்கிறது பாடப்புத்தகம்

Asianet News Tamil  
Published : Feb 03, 2017, 11:44 AM ISTUpdated : Sep 19, 2018, 03:03 AM IST
"கறுப்பா,அசிங்கமா,ஊனமுற்ற பெண்கள் தான் அதிக வரதட்சனை கொடுக்க வேண்டுமாம்" - சொல்கிறது பாடப்புத்தகம்

சுருக்கம்

மத்தியில் ஆளும் பாரதியஜனதா அரசு பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், பல திட்டங்களையும், நிதிகளையும் பட்ஜெட்டில் ஒதுக்கி இருக்கிறோம் என மார்தட்டி வருகிறது. ஆனால், அந்த கட்சி ஆளும் மஹாராஷ்டிரா மாநிலத்தில் 12-ம் வகுப்பு பாடத்தில், பெண்கள் குறித்து மிகவும் இழிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

12-ம் வகுப்பு சமூகவியல் பாடத்தில் “இந்தியாவின் மிக முக்கிய பிரச்சினைகள்” என்ற தலைப்பில் ஒரு பாடம் தரப்பட்டுள்ளது. அதில் கறுப்பாக, அசிங்கமாக, ஊனமுற்ற பெண்களுக்கு திருமணம் ஆகும் போது அதிகமாக வரதட்சனை கொடுக்க வேண்டி இருக்கும். சிவப்பாக இருக்கும் பெண்களுக்கு தேவையில்லை. கருப்பாகவும், அசிங்கமாகவும் இருப்பதால் தான் மாப்பிள்ளை வீட்டார் அதிகமான வரதட்சனையை பெண் வீ்ட்டாரிடம் கேட்கிறார்கள் என்று பெண்களின் உடல் நிறத்தையும், உடல் அமைப்புகளையும் , வரதட்சனையோடு குறிப்பிட்டு தரப்பட்டுள்ளது.

இதுபோன்ற கறுப்பான, அழகில்லாத பெண்களைப் பெற்றவர்கள் உதவியற்றவர்களாக, மாப்பிள்ளை வீட்டாரிடம் வேறு வழியின்றி அதிக வரதட்சனை கொடுத்து தங்களின் பெண்களை திருமணம் செய்து கொடுக்கிறார்கள். இதுதான் வரதட்சனை முறை அதிகரிக்க காரணம் என பாடத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களின் நிறம், அழகு, உடல் அமைப்பு ஆகியவற்றை வரதட்சனையோடு ஒப்பிட்டு மாணவ, மாணவிகள் படிக்கும் பாடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது முகம் சுளிக்கவைக்கிறது.

இது குறித்து மாநில கல்வித்துறை அமைச்சர் வினோத் தவாடேயிடம் கேட்ட போது, “ மாநிலத்தில் உயர்கல்வி வாரியம், சமூகத்தில் நிலவும் பிரச்சினைகளின் உண்மையை நிலை தெரிவிக்க இப்படி குறிப்பிட்டு இருக்கலாம். இருப்பினும் இது தொடர்பாக மாநில உயர்கல்வித் துறையின் தலைவர் கங்காதர் மாமனேயிடம் பேசி, நூல் வடிவமைக்கு குழுவிடம் விளக்கம் கேட்கப்படும்” என்று பொதுப்படையாக விளக்கம்அளித்தார்.

பெண்களின் முன்னேற்றத்துக்கும், பெண்குழந்தைகளிந் நல்வாழ்வுக்கும் மத்தியில் ஆளும் பாரதியஜனதா அரசு தீவிரமாக உழைப்பதாகக் கூறி வருகிறது. ஆனால், மாநிலத்தில் ஆளும் அந்த கட்சி,  பெண்கள் குறித்த பிற்போக்கான எண்ணங்களையும், மாணவ, மாணவிகள் மனதில் ஒரு விதமான தாழ்வு மனப்பான்மையை விதைக்கும் வகையில் பாடத்தில் குறிப்பிட்டுள்ளது.

 

PREV
click me!

Recommended Stories

நாளை நடக்கப்போகும் மாபெரும் சம்பவம்.. உலகமே வியக்கப்போகும் இந்தியா..!
குடியரசு தின விழாவிற்கு பாரம்பரிய முறைப்படி சாரட் வண்டியில் வந்த குடியரசு தலைவர்