18 லட்சம் பேருக்கு பறந்தது நோட்டீஸ் - டெபாசிட் செய்தவர்கள் அதிர்ச்சி..!!

 
Published : Feb 03, 2017, 09:44 AM ISTUpdated : Sep 19, 2018, 03:03 AM IST
18 லட்சம் பேருக்கு பறந்தது நோட்டீஸ் - டெபாசிட் செய்தவர்கள் அதிர்ச்சி..!!

சுருக்கம்

ரூபாய் நோட்டு தடை அறிவிப்பு வெளியான பின் வங்கிகளில் சந்தேகத்துக்கு வரிய வகையில், ரூ. 4.17 லட்சம் கோடிடெபாசிட் செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக 18 லட்சம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என மத்திய நேர்முக வரிகள் வாரியத்தின் தலைவர் சுசில் சந்திரா தெரிவித்துள்ளார்.

நாட்டில் கருப்பு பணம், கள்ள நோட்டுகளை ஒழிக்கும் வகையில் பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என அறிவித்தார். அதைத்தொடர்ந்து கருப்பு பணத்தை வைத்து இருப்பவர்களை கண்டுபிடிக்க வருமான வரித்துறையினர் முடுக்கி விடப்பட்டனர். கடந்த 3 மாதங்களாக நடத்தப்பட்டு வரும் சோதனையில் கோடிக்கணக்கில் பணம் , நகைகள், கணக்கில் வராத சொத்துக்கள் வருமானவரித்துறையினரிடமும், அமலாக்கப்பிரிவினரிடமும் சிக்கி வருகிறது.

இது குறித்து மத்தியஅரசின் நேர்முக வரிகள் வாரியத்தின் தலைவர் சுஷில் சந்திரா கூறுகையில், “ ரூபாய் நோட்டு தடை அறிவிப்புக்கு பின் நாங்கள் மேற்கொண்டவிசாரணையில், சந்தேகத்துக்கு இடமானவகையில், ரூ.4.17 லட்சம் கோடி பணம் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதில் 18 பேர் சிக்குகிறார்கள். இந்த பணம் தொடர்பாக ஏற்கனவே 13 லட்சம் பேரிடம் விளக்கம் கேட்டு இமெயில், எஸ்.எம்.எஸ். அனுப்பப்பட்டுள்ளது. இன்னும் 10 லட்சம்பேரின் விவரங்களை சேகரித்துள்ளோம். மீதமுள்ள 5 லட்சம் பேருக்கு நோட்டீஸ் இன்று அல்லது நாளை அனுப்பப்படும்.

கருப்புபணத்தை பிடிக்கும் முயற்சியில் மத்தியநேர்முக வரிகள் வாரியம் மிக வேகமாகச்செயல்பட்டு வருகிறது. "ஆப்ரேஷன் கிளீன்"  என்ற பெயரில் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறோம்.

இ-மெயில், எஸ்.எம்.எஸ்.மூலம் நோட்டீஸ் பெறப்பட்டவர்கள், அடுத்த10 நாட்களுக்குள் வருமானவரித்துறையினருக்கு மின்அஞ்சல் மூலம் பதில் அளிக்க வேண்டும். மேலும்,இ-பைலிங் மூலம் பதில் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் வருமானவரித்துறையினரின் நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியது இருக்கும்” என்று தெரிவித்தார்.

 

PREV
click me!

Recommended Stories

வி.வி.ராஜேஷுக்கு லக்..! ஶ்ரீலேகாவுக்கு ஏமாற்றம்.. திருவனந்தபுரம் மேயர் ரேஸில் பாஜகவின் அதிரடி முடிவு
7 மணி ஆனா ஊரே ஆஃப் ஆயிடும்! தினமும் 2 மணி நேரம் டிஜிட்டல் விரதம் இருக்கும் வினோத கிராமம்!