உள்ளாட்சித் தேர்தலின் போது பயங்கர வன்முறை ... மாநில தேர்தல் ஆணைய அலுவலகம் சூறை!

First Published Feb 3, 2017, 8:45 AM IST
Highlights


C

நாகாலாந்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக நடைபெற்ற வன்முறை பாேராட்டத்தில், முதலமைச்சர் வீடு உட்பட மாநில தேர்தல் ஆணைய அலுவலகம், துணை கமிஷனர் அலுவலகம் ஆகியவை சூறையாடப்பட்டன.

வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளித்து தேர்தல் நடத்தப்படுகிறது.

இந்த இடஒதுக்கீடுக்கு எதிர்ப்பு தெரிவித்த பழங்குடியின அமைப்புகள், தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகின்றன.

தலைநகர் கோஹிமாவில்  பாேராட்டம், வன்முறையாக வெடித்தது. பல இடங்களில் போலீசாருக்கும் கலவரக்காரர்களுக்கும் இடையே கடும் கல்வீச்சு, மோதல் சம்பவங்கள் நிகழ்ந்தன.

அரசு அலுவலகங்கள் மற்றும் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. முதலமைச்சர் T.R.செலியாங்கின் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டது.

144 தடை உத்தரவு அமலில் இருந்த போதும் பேரணியாக திரண்டு சென்ற வன்முறையாளர்கள் முதலமைச்சரின் வீட்டுக்கு தீ வைத்ததால் பதற்றமான சூழல் உருவானது. 

கடந்த செவ்வாய்க்கிழமை ஆயுதம் ஏந்திய சிலர் முதலமைச்சரின் வீட்டை முற்றுகையிட்ட போது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில் இரண்டு பழங்குடியினத்தவர் கொல்லப்பட்டதையடுத்து உள்ளாட்சித் தேர்தலை ஒத்தி வைக்கும்படி கோரிக்கை வலுத்துள்ளது.

ஆனால் கடையடைப்பு போராட்டங்களுக்கு இடையில் புதன்கிழமை 12 நகரங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றதால் வன்முறை அதிகரித்துள்ளது.

click me!