தலைமை தகவல் ஆணையராக பதவியேற்ற முதல் தலித் ஹீராலால் சமாரியா? யார் இவர்?

By Ramya s  |  First Published Nov 6, 2023, 11:16 AM IST

புதிய தலைமை தகவல் ஆணையராக ஹீராலால் சமாரியா இன்று பதவியேற்றுக் கொண்டார்.


தகவல் அறியும் உரிமை சட்ட விவகாரங்களில் உயர் அதிகாரம் கொண்ட தலைமை தகவல் ஆணையத்தில் ஒரு தலைமை தகவல் ஆணையர், 10 ஆணையர் பதவிகள் உள்ளன. மத்திய தகவல் ஆணையம் பணியாளர் அமைச்சகத்தின் கீழ் வருகிறது. பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பிரதமரால் நியமிக்கப்படும் மத்திய அமைச்சரவை அமைச்சர் ஆகியோரைக் கொண்ட தேர்வுக் குழுவின் பரிந்துரையின் பேரில் மத்திய தகவல் ஆணையத்தின் உறுப்பினர்கள் மற்றும் தலைவர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள்.

தலைமை தகவல் ஆணையர் மற்றும் பிற ஆணையர்கள் 5 ஆண்டுகள் அல்லது 65 வயதை அடையும் வரை பதவியில் இருப்பார்கள். அவர்கள் மறுதேர்தலுக்கு தகுதியற்றவர்கள். அதாவது மீண்டும் இந்த பதவிக்கு போட்டியிட முடியாது.

Tap to resize

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குட ன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்த நிலையில் மத்திய தகவல் ஆணையத்தின் புதிய தலைமை தகவல் ஆணையராக ஹீராலால் சமாரியா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதே போல் ஆனந்தி ராமலிங்கம், பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டின் முன்னாள் நிர்வாக இயக்குனர், வி.கே திவாரி, இந்திய வனத்துறை அதிகாரி ஆகியோரும் புதிய தகவல் ஆணையர்களாக நியமிக்கப்பட உள்ளதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது

இந்த நிலையில்  புதிய தலைமை தகவல் ஆணையராக ஹீராலால் சமாரியா இன்று பதவியேற்றுக் கொண்டார். குடியரசு தலைவர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். தற்போது தகவல் ஆணையராக பணியாற்றி வரும் முன்னாள் ஐஏஎஸ் ஹிராலால் சமாரியா, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேர்வுக் குழுவால் அடுத்த தலைமை தகவல் ஆணையராக சனிக்கிழமை தேர்வு செய்யப்பட்டார். ஆனால், இந்த தேர்வுக் குழுவில் உறுப்பினராக உள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இந்தக் கூட்டத்திற்கு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டாலும், மேற்கு வங்கத்தில் வேலை காரணமாகக் கலந்து கொள்ள முடியவில்லை என்று அவர் கூறினார்.

மிசோரம், சத்தீஸ்கரில் நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு!

தற்போது உள்ள தகவல் ஆணையர்களில் ஹீராலால் சமாரியா சீனியர் என்பதால் அவருக்கு இந்த பதவி வழங்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஹீராலால் சமாரியா மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தில் செயலாளராக இருந்து ஓய்வு பெற்றவர் ஆவார். சிவில் இன்ஜினியரிங்கில் இளங்கலை பட்டம் பெற்ற அவர், அரசு நிர்வாகத்தில் நிபுணத்துவம் பெற்றவர். தலைமை தக்வல் ஆணையர் பொறுப்பை வகிக்கும் முதல் தலித் நபர் என்ற பெருமையை ஹிராலால் சமாரியா பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

click me!