கத்தார் நாட்டில் நடந்து வரும் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியை நடத்தும் நிர்வாகம், இந்தியாவில் இருந்து தப்பிஓடிய முஸ்லிம் மதபோதகர் ஜாகீர் நாயக்கிற்கு சிறப்பு அழைப்பு விடுத்துள்ளது.
கத்தார் நாட்டில் நடந்து வரும் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியை நடத்தும் நிர்வாகம், இந்தியாவில் இருந்து தப்பிஓடிய முஸ்லிம் மதபோதகர் ஜாகீர் நாயக்கிற்கு சிறப்பு அழைப்பு விடுத்துள்ளது.
உலகக் கோப்பைப் போட்டியில் காணவருமாறும், சிறப்பு பிரசங்கங்கள் நடத்துமாறும் ஜாகீர் நாயக்கிற்கு கத்தார் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
undefined
ராகுல் காந்தி நடத்தும் பாரத் ஜோடோ நடைபயணம் 23ம் தேதி மத்தியப் பிரதேசத்தில் நுழைகிறது
மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஜாகீர் நாயக் மீது வெறுப்புப் பேச்சு, சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தியாவில் இருந்து தப்பிச் சென்ற ஜாகீர் நாயக் கடந்த 2017ம் ஆண்டுமுதல் மலேசியாவில் வசித்து வருகிறார். ஜாகீர் நாயக்கை தேடப்படும் குற்றவாளியாகவும் இந்திய அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் மலேசியாவில்தான் ஜாகீர் நாயக் தொடர்ந்து வசித்து வருகிறார்.
இந்நிலையில் கத்தார் அரசின் விளையாட்டுச் சேனலான அல்காஸில் பணியாற்றும் நெறியாளர் பைசல் அல்ஹஜ்ரி சமூக வலைத்தளத்தில் கருத்துப் பதிவிட்டுள்ளார். அதில் “ இந்தியாவைச் சேர்ந்த ஜாகீர் நாயக், கத்தாரில் நடக்கும் பிபா கால்பந்து உலகக் கோப்பையில் பங்கேற்கிறார். இந்த கால்பந்து தொடர் முழுவதும் ஏராளமான முஸ்லிம் மதப்பிரச்சாரங்களையும் நடத்த உள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்
ஜிஎஸ்டி சட்டத்தில் ஐபிசியின் கீழ் வரும் தண்டனைக் குற்றப்பிரிவை நீக்க மத்திய அரசு ஆலோசனை
காத்தார் சேனல் நெறியாளரும், பத்திரிகையாளருமான ஜாயின் நாயக் ஜாகீர் வருகையை உறுதி செய்துள்ளார். ட்விட்டரில் அவர் ஜாகீர்நாயக் புகைப்படத்தை பதிவிட்டு அதில் “ நம்முடைய காலத்தில் இஸ்லாத்தின் சிறந்த மதபோதகரான ஜாரீக் நாயக் கத்தார் நகருக்கு வந்து சேர்ந்துவிட்டார்” எனத் தெரிவிதத்துள்ளார்.
இஸ்லாமிஸ் ரிசர்ச் பவுண்டேஷன் எனும்அமைப்பை நிறுவி ஜாகீர் நாயக் நடத்தி வந்தார். இஸ்லாத்தை பரப்பும் நோக்கில் மதப்பிரசாரத்தில் ஜாகீர் நாயக் ஈடுபட்டார், ஆனால், அதில் ஆட்சேபத்துக்குரிய, வெறுப்பைஉருவாக்கும் கருத்துக்களும் இருந்தன என்று விசாரணை அமைப்புகள் குற்றம்சாட்டுகின்றன.
சட்டவிரோதப் பணப்பரிமாற்றச் சட்டத்தின் கீழ் ஜாகீர் நாயக் நடத்திய ஐஆர்எப் அறக்கட்டளையை 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு தடை செய்துள்ளது.
முதல் போட்டியில் கத்தாரை வீழ்த்தி ஈகுவடார் அபார வெற்றி.! வரலாற்று படுதோல்வி அடைந்த கத்தார்
இந்நிலையில் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டுள்ள ஜாகீர் நாயக், தொடர் முழுவதும் ஏராளமான முஸ்லிம் மதப்பிரச்சாரத்தை நிகழ்த்த உள்ளார் என்று நெறியாளர் அல்ஹஜ்ரி தெரிவித்துள்ளார்.
ஐஆர்எப் அமைப்புக்கு ஆதரவானர்கள், ஜாகீர் நாயக் ஆதரவாளர்கள் குஜாரத், கர்நாடகா, ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட், கேரளா, மகாராஷ்டிரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ளனர்.