காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நடத்தும் பாரத் ஜோடோ நடைபயணம் வரும் 23-ம் தேதி மத்தியப் பிரதேச மாநிலத்துக்குள் நுழைகிறது என்று கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நடத்தும் பாரத் ஜோடோ நடைபயணம் வரும் 23-ம் தேதி மத்தியப் பிரதேச மாநிலத்துக்குள் நுழைகிறது என்று கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் “ நவம்பர் 21, 22 ம்தேதி பாரத் ஜோடோ நடைபயணம் சிறிய ஓய்வு எடுக்கும்.அதன்பின 23ம்தேதி முதல் மத்தியப்பிரதேசத்தில் நடைபயணம் அடியெடுத்து வைக்கும்.
நிர்மலா சீதாராமன் தலைமையில் பட்ஜெட் ஆலோசனைக் கூட்டம் இன்று தொடக்கம்: எதற்கு முக்கியத்துவம்?
மத்தியப்பிரதேசத்தில் உள்ள புர்ஹான்பூர் மாவட்டத்தில் உள்ள போதர்லி கிராமத்தில் இருந்து ராகுல் காந்தி நடைபயணம் வரும் 23ம்தேதி முதல் மீண்டும் தொடங்கும்” எனத் தெரிவித்தார்
மத்தியப் பிரதேச காங்கிரஸ் பொதுசெயலாளர் ராஜீவ் சிங் கூறுகையில் “ நவம்பர் 23ம் தேதி இரவு ராகுல் காந்தியின் நடைபயணம் புர்ஹான்பூர் நகரை வந்தடைந்து, 24ம் தேதி காலை அண்டை மாவட்டமான காந்தவாவுக்குள் செல்லும்” எனத் தெரிவித்தார்.
மகாராஷ்டிரா மாநிலத்துக்குள் கடந்த மாதம் இறுதியில் நுழைந்த ராகுல் காந்தி அங்கு 18 நாட்களுக்கும் மேலாக நடந்தார். மகாராஷ்டிராவில் ராகுல் காந்தியின் நடைபயணத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும், ராகுல் காந்தி சவார்க்கர் பற்றி பேசியது பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த முகேஷ் அம்பானியின் மகள்... குடும்பத்தினர் மகிழ்ச்சி!!
இது ராகுல் காந்தியின் நடைபயணத்துக்கு கூடுதல் பரபரப்பையும், விமர்சனத்தையும் ஏற்படுத்தியது. மகாராஷ்டிராவில் உள்ள பாஜக, சிவசேனா உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ராகுல் காந்தி, சவார்க்கர் பற்றி பேசியதற்கு எதிராக நின்றன. காங்கிரஸுடன் மகாவிகாஸ் அகாதி கூட்டணியில் இருந்த சிவசேனா கட்சியும் ராகுல் காந்தி பேச்சை எதிர்த்தது குறிப்பிடத்தக்கது.
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நடைபயணம் செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் முதல் செல்லும் இந்த நடபயணத்தில் ராகுல் காந்தி இதுவரை தமிழகம், கேரளா, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களைக் கடந்துள்ளார். இந்த பயணத்தில் மொத்தம் 12 மாநிலங்களை ராகுல் காந்தி கடக்க உள்ளார். 150 நாட்களில் 3,570 கி.மீ தொலைவை ராகுல் காந்தி பயணிக்க உள்ளார்.