கண்ணிமைக்கு நேரத்தில் நடந்த கோர விபத்து.. தூக்கி வீசப்பட்டதில் 12 பேர் உடல் நசுங்கி உயிரிழந்த பரிதாபம்..!

By vinoth kumarFirst Published Nov 21, 2022, 7:19 AM IST
Highlights

பீகார் மாநிலத்தின் வைஷாலி மாவட்டத்தை அடுத்த சுல்தான்பூர் கிராமத்தில் சாலையோரம் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது, அதிவேகத்தில் வந்த லாரி எதிர்பாராத விதமாக பக்தர்கள் மீது மோதியது. 

பீகாரில் பக்தர்கள் மீது அதிவேகமாக வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 சிறுவர்கள் உட்பட 12 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தின் வைஷாலி மாவட்டத்தை அடுத்த சுல்தான்பூர் கிராமத்தில் சாலையோரம் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது, அதிவேகத்தில் வந்த லாரி எதிர்பாராத விதமாக பக்தர்கள் மீது மோதியது. இந்த கோர விபத்தில் 12 பேர் உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

இதையும் படிங்க;- கட்டாய மதமாற்றக் கொடுமை! லக்னோவில் 4வது மாடியிலிருந்து கீழே தள்ளி இளம் பெண் கொலை : காதலர் கைது

இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தகவல் அறிந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. மேலும், உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கோர விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

பீகார் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர்  மோடி, அம்மாநில முதல்வர்நிதிஷ்குமார் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தத குடும்ங்களுக்கு நிவாரண உதவியை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க;- உத்தரகாண்ட் சாலை விபத்தில் 2 பெண்கள் உள்பட 12 பேர் உயிரிழப்பு!!

click me!