
தொழிலதிபரும் கோடீஸ்வரருமான முகேஷ் அம்பானியின் மகளும் மருமகனுமான ஈஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிரமல் ஆகியோருக்கு கடந்த சனிக்கிழமை இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளது. இந்த தம்பதியருக்கு ஆதியா என்ற பெண் குழந்தையும், கிருஷ்ணா என்ற ஆண் குழந்தையும் பிறந்துள்ளது.
இதையும் படிங்க: மங்களூரில் ஆட்டோ வெடித்தது விபத்து அல்ல..! தீவிரவாத தாக்குதல்..! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட கர்நாடக டிஜிபி
இதுக்குறித்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ஆர்ஐஎல்) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், "எங்கள் குழந்தைகளான ஈஷா மற்றும் ஆனந்த் ஆகியோர் 2022 நவம்பர் 19 அன்று இரட்டைக் குழந்தைகளுடன் சர்வவல்லமையுள்ள இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளனர் என்பதை பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஈஷா மற்றும் குழந்தைகள், பெண் குழந்தை ஆதியா மற்றும் ஆண் குழந்தை கிருஷ்ணா நலமாக உள்ளனர்.
இதையும் படிங்க: மங்களூரில் ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்து விபத்து..! சென்னையில் பாதுகாப்பு அதிகரிப்பு
அவர்களின் வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டத்தில் ஆதியா, கிருஷ்ணா, ஈஷா மற்றும் ஆனந்த் ஆகியோருக்கு உங்கள் ஆசீர்வாதங்களையும் நல்வாழ்த்துக்களையும் நாங்கள் கோருகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிரமல் ஆகியோர் கடந்த டிசம்பர் 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.