
ஏசியாநெட் நியூஸ் நிர்வாக ஆசிரியர் சிந்து சூர்யகுமாரை முகநூல் பதிவு மூலம் அவமானப்படுத்திய வழக்கில் முன்னாள் மாஜிஸ்திரேட் எஸ்.சுதீப் நீதிமன்றத்தில் சரணடைந்தார். நிர்வாக ஆசிரியர் மனோஜ் கே தாஸ் அளித்த புகாரின் பேரில் சுதீப் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கில் நாளை (வெள்ளிக்கிழமை) காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், சுதீப் இன்று நேரில் ஆஜராகி சரண் அடைந்திருக்கிறார்.
ஜூலை 3, 2023 அன்று, எஸ். சுதீப் ஏசியாநெட் எடிட்டர் சிந்து சூர்யகுமார் குறித்து பேஸ்புக்கில் அவதூறாகப் பதிவிட்டார். இந்த பேஸ்புக் பதிவு வைரலானதை அடுத்து, சிந்து சூர்யகுமாருக்கு ஆதரவாக ஊடகவியலாளர்கள் பலர் குரல் கொடுத்தனர். சுதீப்பின் பதிவை விமர்சித்தவர்களும் அவரது தரப்பில் இருந்து தொடர்ந்து தவறான முறையில் பதில்கள் வந்தன.
காசிக்குப் போய் கங்கையில் நீராட விருப்பமா? ரயில்வே இயக்கும் சிறப்பு ரயிலில் போகலாம்! முழு விவரம்
இதன் எதிரொலியாக ஏசியாநெட் நியூஸ் நிர்வாக ஆசிரியர் மனோஜ் கே தாஸ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால். அதன்படி, ஜூலை 21 அன்று, திருவனந்தபுரம் கண்டோன்மென்ட் போலீஸார் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 354 A(1) மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 67 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
போலீஸ் சைபர் செல் நடத்திய விசாரணையில், வழக்கு தொடர்பான ஃபேஸ்புக் பதிவு எஸ். சுதீப்பின் பேஸ்புக் பக்கத்தில் வெளியானது உறுதியானது. இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவர்களிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
எஸ்.சுதீப் முகநூல் மூலம் பல்வேறு பிரச்னைகளுக்கு அளித்த பதில்கள் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. இதையடுத்து, உயர்நீதிமன்றம் நடத்திய விசாரணைக்குப் பிறகு 2021ஆம் ஆண்டு சப்-ஜெட்ஜ் பதவியில் இருந்து எஸ்.சுதீப் ராஜினாமா செய்ய நேரிட்டது.
2019 டிசம்பரில், ஆலப்புழா எரமல்லூரைச் சேர்ந்த எஸ் சுதீப் மீது உயர்நீதிமன்றம் விசாரணையைத் தொடங்கியது. விசாரணை அறிக்கை 2020 இல் வந்தது. இதனால் 2021 இல், சுதீப் துணை நீதிபதி பதவியை ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது. நீதிபதிகளுக்குப் பொருந்தாத வகையில் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தது குறித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டதால், சுதீப் ராஜினாமா செய்தார்.
78 வயதில் 9ஆம் வகுப்பில் சேர்ந்த முதியவர்... தினமும் 3 கி.மீ. நடந்து பள்ளிக்கூடம் போகிறாராம்!