இந்துக் கடவுள்களுக்கு எதிராக உரையாற்றிய பேராசிரியர்.. மாணவர்கள் அளித்த புகார் - என்ன செய்தது கல்லூரி நிர்வாகம்

Ansgar R |  
Published : Aug 03, 2023, 05:17 PM ISTUpdated : Aug 03, 2023, 05:37 PM IST
இந்துக் கடவுள்களுக்கு எதிராக உரையாற்றிய பேராசிரியர்.. மாணவர்கள் அளித்த புகார் - என்ன செய்தது கல்லூரி நிர்வாகம்

சுருக்கம்

புனேவில் உள்ள கல்லூரி ஒன்றில், பேராசிரியர் ஒருவர் ஹிந்து கடவுள்களான ராமர் மற்றும் சீதை குறித்து அவதூறாக பேசியதாகவும், மற்றும் பிற இந்து கடவுள்களுடன், இஸ்லாம் மற்றும் கிறித்துவம் போன்ற பிற மதங்களை ஒப்பிட்டு அவர் ஹிந்து மதத்தை தவறாக பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்துக் கடவுள்களுக்கு எதிராக புனேவை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் பாடம் எடுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்து சமயத்திற்கு எதிராக பேராசிரியர் அசோக் டோல் என்ற அந்த பேராசிரியர் பேசியதாக அவர் மீது மாணவர்கள் புகார் அளித்துள்ளனர். 

மாணவர்கள் மத்தியில் அந்த பேராசிரியர் அசோக் பேசிய விஷயங்களை அங்கு குழுமியிருந்த மாணவர்கள் சிலர் வீடியோவாக எடுத்துள்ளனர். அந்த வீடியோ தற்பொழுது கல்லூரி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

கேபினட் செயலாளர் ராஜீவ் கெளபாவின் பதவிக்காலம் நீட்டிப்பு.. அமைச்சரவை நியமனக் குழு கொடுத்த கிரீன் சிக்னல்!

மாணவர்களிடையே பேசத் துவங்கிய பேராசிரியர் அசோக், இந்து கடவுளுக்கான ராமர் மற்றும் சீதையை விமர்சித்ததாகவும். மேலும் இந்து மத கடவுள்களை, கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமிய மதத்துடன் இணைத்து இந்து மதம் குறித்து அவதூறாக பேசியதாகவும் மாணவர்கள் புகார் அளித்துள்ளனர். இது மாணவர்களின் இன உணர்வை புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளதால் இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் மாணவர்கள் புகார் அளித்துள்ளனர்.

ஆனால் இந்த விவகாரம் குறித்தும், உடனடியாக அந்த பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்லூரி நிர்வாகம் உறுதி அளித்த போதிலும், அவர் மீது எந்த நடவடிக்கையும் இன்றளவம் எடுக்கப்படவில்லை என்று மாணவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து மாணவர்கள் இந்த விஷயத்தை ஹிந்துத்துவ அமைப்புகளிடம் கொண்டு சென்ற நிலையில், தற்போது அந்த கல்லூரியில் மாபெரும் பிரச்சனை வெடித்துள்ளது. 

காசிக்குப் போய் கங்கையில் நீராட விருப்பமா? ரயில்வே இயக்கும் சிறப்பு ரயிலில் போகலாம்! முழு விவரம்

PREV
click me!

Recommended Stories

காதலியை ஆசைவார்த்தை கூறி காட்டுக்கு அழைத்து சென்ற காதலன்! அலறிய சித்ரப் பிரியா! அடுத்து நடந்த அதிர்ச்சி!
IndiGo: இனி எந்த விமானமும் தாமதம் இல்லை..! கண்ட்ரோல் ரூமில் நின்று கண்காணிக்கும் மத்திய அமைச்சர்