கேபினட் செயலாளர் ராஜீவ் கெளபாவின் பதவிக்காலம் நீட்டிப்பு.. அமைச்சரவை நியமனக் குழு கொடுத்த கிரீன் சிக்னல்!

Ansgar R |  
Published : Aug 03, 2023, 04:56 PM ISTUpdated : Aug 03, 2023, 05:40 PM IST
கேபினட் செயலாளர் ராஜீவ் கெளபாவின் பதவிக்காலம் நீட்டிப்பு.. அமைச்சரவை நியமனக் குழு கொடுத்த கிரீன் சிக்னல்!

சுருக்கம்

கடந்த 2019ம் ஆண்டு கேபினட் செயலாளராக பொறுப்பேற்ற ராஜிவ் கெளபா, பெருந்தொற்றுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது கேபினட் செயலாளராக செயல்பட்டு வரும் திரு. ராஜிவ் கெளபா IAS அவர்களின் சேவை நீடிக்கப்படுவதாக அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த 2023ம் ஆண்டின் ஆகஸ்ட் 30ம் தேதியுடன் அவருடைய பணிக்காலம் முடியவில்ல நிலையில் தற்போது மேலும் ஓராண்டு காலம் அவரே கேபினட் செயலாளராக பணியாற்றுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

லேப்டாப், டேப்லெட்ஸ் போன்ற சீன இறக்குமதி பொருட்களுக்கு ஆப்பு; மத்திய அரசு கொண்டு வந்தது கடிவாளம்!!

திரு. ராஜிவ் கெளபா கடந்த 1959ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி பஞ்சாபில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இரண்டு ஆண்டு காலம் அவருடைய பதவி நீடிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் ஓராண்டு காலம் அவருடைய பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

பாட்னாவில் தனது பட்டப்படிப்பை முடித்த கெளபா ஏற்கனவே உள்துறைச் செயலாளராகவும், இந்திய உள்துறை அமைச்சக பணிகள் மற்றும் ஜார்கண்ட் மாநில தலைமைச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மனைவி பம்மி கௌபா ஜேபி இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியின் பயோடெக்னாலஜி துறையின் டீன் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜீவுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

78 வயதில் 9ஆம் வகுப்பில் சேர்ந்த முதியவர்... தினமும் 3 கி.மீ. நடந்து பள்ளிக்கூடம் போகிறாராம்!

PREV
click me!

Recommended Stories

பிரதமர் மோடியின் அடுத்த டூர்! ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் 4 நாள் சுற்றுப்பயணம்!
120 கி.மீ. தூர இலக்கை தாக்கும் பினாகா ராக்கெட்! ரூ.2,500 கோடி ஒதுக்கிய மத்திய அரசு!