மஹுவா மொய்த்ரா ஆஜராக நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கைக் குழு உத்தரவு!

By Manikanda Prabu  |  First Published Oct 26, 2023, 5:53 PM IST

திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா ஆஜராக நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கைக் குழு உத்தரவிட்டுள்ளது


நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதற்கு, திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. மஹுவா மொய்த்ரா ரூ.2 கோடி லஞ்சம் பெற்றுள்ளார் என்று பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு அவர் அனுப்பிய புகார் கடிதத்தில், அதானி குழுமத்தை குறிவைத்து கேள்வி எழுப்புவதற்காக, தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் மஹுவா மொய்த்ரா லஞ்சம் பெற்றுள்ளதாக குற்றம் சாட்டியிருந்தார். 

அதனைத் தொடர்ந்து குற்றச்சாட்டில் அடிப்படை ஆதாரம் இருப்பதாகக்கூறி, நாடாளுமன்ர ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணைக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார். ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு மறுப்பு தெரிவித்த திரிணமூல் காங்கிரஸ் எம்.பி., மஹுவா மொய்த்ரா, “போலி பட்டாதாரி மற்றும் பிற பாஜக பிரமுகர்கள் மீதான உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. சபாநாயகர் அவைகளை எல்லாம் முடித்த பின்னர் என் மீதான குற்றசாட்டுக்கு விசாரணை குழு அமைக்கட்டும்.” என்றார்.

Latest Videos

undefined

இந்த நிலையில், திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா ஆஜராக நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கைக் குழு உத்தரவிட்டுள்ளது. வருகிற 31ஆம் தேதி மஹுவா மொய்த்ரா ஆஜராக நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கைக் குழு உத்தரவிட்டுள்ளது.

பெட்ரோல் குண்டு வீச்சு: காவல்துறை மீது ஆளுநர் மாளிகை பரபரப்பு குற்றச்சாட்டு!

நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கைக் குழு கூட்டத்துக்கு பிறகு பேசிய அக்குழுவின் தலைவரும், பாஜக எம்பியுமான வினோத் குமார் சோங்கர், திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதில் உள்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகங்களின் உதவியைப் பெறுவோம் என்றார்.

முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர் ஜெய் அனந்த் டெஹாத்ராய் மற்றும் பாஜக எம்.பி., நிஷிகாந்த் துபே ஆகியோரின் வாக்குமூலத்தை நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கைக் குழு பதிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!