Qatar : கத்தார் நாட்டில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் 8 பேருக்கு கத்தார் நாட்டு நீதிமன்றம் தற்போது மரண தண்டனை விதித்துள்ளது என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கத்தார் நாட்டின் இந்த தண்டனை குறித்து இந்திய அரசாங்கம் அதிர்ச்சியை வெளிப்படுத்தியது மட்டும்மலால் தனது குடிமக்களின் விடுதலையைப் பாதுகாப்பதற்கான அனைத்து சட்ட வழிகளையும் ஆராய்வதாக உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள அந்த 8 பெரும் ஒரு காலத்தில் பெரிய இந்திய போர்க்கப்பல்களுக்கு தலைமை தாங்கிய செயல்பட்டு வந்த அதிகாரிகள் ஆவர், மேலும் கத்தாரின் ஆயுதப்படைகளுக்கு பயிற்சி மற்றும் அது தொடர்புடைய சேவைகளை வழங்கும் தனியார் நிறுவனமான தாஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் மற்றும் கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
undefined
அமெரிக்காவில் தொடர் துப்பாக்கிச் சூடு: 22 பேர் பலி, குறைந்தது 50 பேர் காயம்
கடந்த ஓராண்டு காலமாக கத்தார் நாட்டில் சிறைபிடிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ள அந்த 8 பேரின் ஜாமீன் மனுக்கள் ஏற்கனவே பல முறை நிராகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மற்றும் கத்தார் அதிகாரிகளால் அவர்களின் காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று அக்டோபர் 26ம் தேதி கத்தார் முதன்மை அமர்வு நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
"மரண தண்டனையின் தீர்ப்பால் நாங்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளோம், விரிவான தீர்ப்புக்காக காத்திருக்கிறோம். நாங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சட்டக் குழுவுடன் தொடர்பில் இருக்கிறோம், மேலும் அனைத்து சட்ட வழிகளையும் ஆராய்ந்து வருகிறோம்" என்று வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
"நாங்கள் இந்த வழக்கிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம், அதை உன்னிப்பாகப் பின்பற்றி வருகிறோம். அனைத்து தூதரக மற்றும் சட்ட உதவிகளையும் நாங்கள் தொடர்ந்து வழங்குவோம். நாங்கள் கத்தார் அதிகாரிகளுடன் இந்த தீர்ப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம்" என்றும் அமைச்சக அறிக்கை கூறுகிறது.