பெங்களூரு மக்களைப் பற்றித் தெரிந்துகொள்ளும் பொருட்டு கூகுள் வேலையை விட்டுவிட்டு இங்கு வந்திருப்பதாக அவர் கூறினார் என்றும் ராகவ் சொல்கிறார்.
ராகவ் துவா உபர் பெங்களூருவில் உபர் பைக் டாக்சியில் பயணித்தபோது சந்தித்த சுவாரஸ்யமான அனுபவத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அப்போது, கூகுள் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் இப்போது பைக் டாக்சி ஓட்டிக்கொண்டிருக்கிறார் என்பதை அறித்து ஷாக் ஆகியிருக்கிறார்.
அந்த முன்னாள் கூகுள் ஊழியர் யார் என்று வெளிப்படையாகச் சொல்லாமல் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார். சமீபத்தில் பெங்களூருக்கு இடம்பெயர்ந்த அவர் உபர் நிறுவனத்தில் இணைந்து பைக் டாக்சி ஓட்டி வருகிறார் என்றும் ராகவ் தெரிவித்துள்ளார். பெங்களூரு மக்களைப் பற்றித் தெரிந்துகொள்ளும் பொருட்டு கூகுள் வேலையை விட்டுவிட்டு இங்கு வந்திருப்பதாக அவர் கூறினார் என்றும் ராகவ் சொல்கிறார்.
சிங்கப்பூர் போகணுமா? உங்களுக்காக ஏர் இந்தியாவின் சூப்பர் அறிவிப்பு! யூஸ் பண்ணிக்கோங்க!
My Uber Moto driver is ex-google, moved to Bangalore 20 days ago from Hyderabad.
He is just doing this to explore the city it seems. pic.twitter.com/C2zA71fMdJ
"என்னுடைய உபர் பைக் டிரைவர் ஒரு கூகுள் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர். 20 நாட்களுக்கு முன்புதான் ஹைதராபத்தில் இருந்து பெங்களூருக்கு வந்துள்ளார். பெங்களூருவைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காவே தனது வேலையை விட்டுவிட்டு வந்திருக்கிறார்" என்று ட்விட்டரில் ராகவ் பதிவிட்டிருக்கிறார்.
தனது ட்வீட்டில் அந்த முன்னாள் கூகுள் ஊழியருடன் சவாரி செய்தபோது எடுத்த வீடியோ ஒன்றையும் இணைந்துள்ளார். இந்தப் பதிவு வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது. ஏராளமான லைக்ஸையும் அள்ளி இருக்கிறது.
ட்விட்டரில் வெளியான ராகவ் துவாவில் பதிவுக்கு நெட்டிசன்கள் பலர் ஆச்சரியத்துடன் ரிப்ளை செய்து வருகிறார்கள். "இது உண்மையிலேயே வியப்பானது" என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். மற்றொரு நபர், "பெங்களூருவில், எங்காவது ஒரு கல்லை எறிந்தால், அது ஒரு சாப்ட்வேர் ஊழியர் மேல்தான் விழும்" என்று நகைச்சுவையாகப் பதிவிட்டுள்ளார்.
கூகுளில் பெண்ணுக்கு ப்ரொமோஷன் கிடையாது! ஆணாதிக்க போக்கினால் 1 பில்லியன் டாலர் தண்டம்!