சிங்கப்பூர் போகணுமா? உங்களுக்காக ஏர் இந்தியாவின் சூப்பர் அறிவிப்பு! யூஸ் பண்ணிக்கோங்க!

By SG Balan  |  First Published Oct 26, 2023, 3:05 PM IST

ஏர் இந்தியா இப்போது ஒவ்வொரு வாரமும் சிங்கப்பூருக்கு இந்தியாவின் முக்கிய நகரங்களில் இருந்து மொத்தம் 38 இடைநில்லா விமானங்களை இயக்குகிறது.


இந்தியாவின் முதன்மையான உலகளாவிய விமான நிறுவனமான ஏர் இந்தியா பெங்களூரு மற்றும் சிங்கப்பூர் நகரங்களை இணைக்கும் நேரடி இடைநில்லா விமான சேவையை அறிவித்துள்ளது. அக்டோபர் 22, 2023 முதல் இந்தப் புதிய விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.

ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட AI392 விமானம் பெங்களூரில் இருந்து இரவு 10:30 மணிக்கு புறப்பட்டு, சிங்கப்பூருக்கு காலை 05:40 மணிக்கு சிங்கப்பூரை எட்டும். திரும்பும் பயணத்தில், சிங்கப்பூரில் இருந்து காலை 6:40 மணிக்குப் புறப்பட்டு, பெங்களூருவுக்கு காலை 8:35 மணிக்கு வந்தடையும்.

Tap to resize

Latest Videos

அதிநவீன ஏர்பஸ் A321 விமானம் மூலம் இயக்கப்படும் இந்த விமான சேவை இரண்டு வகுப்புகளைக் கொண்டது. 170 வசதியான எகானமி வகுப்பு இருக்கைகள் மற்றும் 12 ஆடம்பரமான பிசினஸ் வகுப்பு இருக்கைகள் உள்ளன. திங்கள், வியாழன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த விமான சேவை செயல்படும்.

இந்தப் புதிய விமான சேவை சுற்றுலாப் பயணிகளைக் கவரும் நோக்கில் இருப்பது மட்டுமின்றி, முக்கியமான வர்த்தக வழித்தடமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தவிர, ஏர் இந்தியா மும்பையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானங்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. அக்டோபர் 22 முதல் இந்த எண்ணிக்கை வாரத்திற்கு 7 முதல் 13 வரை உயரும் என்று சொல்லபடுகிறது.

ஏர் இந்தியா இப்போது ஒவ்வொரு வாரமும் சிங்கப்பூருக்கு மொத்தம் 38 இடைநில்லா விமானங்களை இயக்குகிறது. டெல்லி (14 விமானங்கள்), மும்பை (13 விமானங்கள்), சென்னை (7 விமானங்கள்) மற்றும் பெங்களூரு (4 விமானங்கள்) போன்ற நகரங்களை இந்த விமானங்கள் சிங்கப்பூருடன் இணைக்கிறது.

click me!