ரயில் தாமதமா வந்தால் என்ன செய்யணும்? டிக்கெட் கட்டணத்தை முழுமையாகத் திரும்பப் பெறும் வழி!

By SG Balan  |  First Published Oct 26, 2023, 11:21 AM IST

ரயில் தாமதம் ஏற்பட்டால் பணத்தைத் திரும்பப் பெற இந்திய ரயில்வே இணையதளம் அல்லது IRCTC செயலியில் ஆன்லைனில் பணத்தைத் திரும்பப் பெற விண்ணப்பிக்கலாம். 


இந்திய ரயில்வே சில நேரங்களில் கட்டணத்தொகையைத் திரும்பப் பெறும் வசதியை பயணிகளுக்கு வழங்கி வருகிறது. ரயில் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டாலும், ரயில் டிக்கெட்டை ரத்து செய்தாலோ, ஏதேனும் காரணத்தால் ரயிலைத் தவறவிட்டாலோ பணத்தைத் திரும்பப் பெறும் வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம்.

ரயில் தாமதம் ஏற்பட்டால்...

Latest Videos

undefined

நீங்கள் பயணிக்க விரும்பும் ரயில் சில காரணங்களால் 3 மணிநேரம் அல்லது அதற்கு மேல் தாமதமாக வந்தால், டிக்கெட்டை ரத்து செய்து முழு பணத்தையும் திரும்பப் பெறலாம். 3 மணி நேரத்திற்கு ரயில் மேல் தாமதமாகும்போது, ஸ்டேஷன் மாஸ்டரிடம் புகார் செய்யலாம்.

இதுவரை ரயில்வே கவுன்டரில் ஆஃப்லைன் (offline) முறையில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு மட்டுமே இந்த வசதி இருந்தது. இப்போது IRCTC போன்ற இணையதளங்கள் மூலம் டிக்கெட் வாங்கும் ஆன்லைன் வாடிக்கையாளர்களுக்கும் இந்த வசதி விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் சுற்றுலா மாநாடு: புதுச்சேரி அரங்கைத் திறந்து வைத்தார் அமைச்சர் லட்சுமிநாராயணன்

ரயில் தாமதம் ஏற்பட்டால் பணத்தைத் திரும்பப் பெற இந்திய ரயில்வே இணையதளம் அல்லது IRCTC செயலியில் ஆன்லைனில் பணத்தைத் திரும்பப் பெற விண்ணப்பிக்கலாம். அப்போது ரயில் டிக்கெட் விவரங்களை கவனமாகச் சரிபார்க்க வேண்டும். உங்கள் பணத்தைத் திரும்பப்பெறுவதற்கான விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டதும், டிக்கெட் தொகை உங்கள் வங்கிக் கணக்கில் திருப்பிச் செலுத்தப்படும்.

ரயிலைத் தவறவிட்டால்...

ரயிலில் டிக்கெட் பெற்ற பயணிகள் ஏதேனும் காரணத்தால் ரயிலைத் தவறவிட்டால், முழுப் பணத்தையும் திரும்பப் பெற ஐ.ஆர்.சி.டி.சி. (IRCTC) செயலியில் TDR பகுதியில் பதிவு செய்யலாம். இதற்கு, ரயில் புறப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் TDR படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்

ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகளில் டிக்கெட் வாங்கிய அனைத்து பயணிகளுக்கும் இந்த அம்சம் உள்ளது. ரயில் தாமதம் காரணமாக வேறொரு ரயிலில் பயணம் செய்தாலும், டிக்கெட்டை ரத்து செய்து, முழுப் பணத்தையும் திரும்பப் பெறலாம்.

ரயில் தாமதமாவது உறுதி செய்யப்பட்டதும், இந்திய ரயில்வே பயணிகளுக்கு காத்திருப்பு அறை மற்றும் இலவச உணவு ஆகிய வசதிகளையும் கொடுக்கிறது. ரயில் தாமதம் அல்லது ரத்து காரணமாக ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டால் இந்த வசதிகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம். 

சென்னை, கோவை, மதுரை மக்களுக்கு குட் நியூஸ்! விரைவில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிநவீன தாழ்தளப் பேருந்து!

click me!