பாடப்புத்தகங்களில் இடம்பெற்றுள்ள “இந்தியா” என்பதற்கு பதில் “ பாரத்” என்று பெயர் மாற்ற தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) குழு பரிந்துரை செய்துள்ளது
நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பாடப்புத்தகங்களில் இடம்பெற்றுள்ள “இந்தியா” என்பதற்கு பதில் “ பாரத்” என்று பெயர் மாற்ற தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) குழு பரிந்துரை செய்துள்ளது. புதிய தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020ன் படி பாடத்திட்டத்தை மாற்ற தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியா என்ற பெயர் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது என்பதால், அதனை பாரத் என்று பெயர் மாற்றம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக என்.சி.இ.ஆர்.டி அமைத்த குழு தெரிவித்துள்ளது. இருப்பினும், இது ஒரு பரிந்துரை மட்டுமே மற்றும் இந்த விஷயத்தில் NCER-ன் இறுதி ஒப்புதல் இன்னும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தக் குழு, 'இந்து வெற்றிகளை' முன்னிலைப்படுத்தவும், பாடப்புத்தகங்களில் 'பண்டைய வரலாறு' என்பதற்குப் பதிலாக 'கிளாசிக்கல் வரலாறு' என்பதை அறிமுகப்படுத்தவும் பரிந்துரைத்துள்ளது.NCERT இயக்குனர் இதுகுறித்து பேசிய போது “ தற்போது இது ஒரு பரிந்துரை மட்டுமே என்றும் இன்னும் ஒப்புதல் பெறவில்லை என்றும் கூறினார்.
undefined
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இதனிடையே காங்கிரஸ் தலைவர் பிரியங்க் கார்கே, என்சிஇஆர்டி புத்தகங்களில் பெயரை மாற்றும் மத்திய அரசின் நடவடிக்கை குறித்து பேசினார், “ அரசாங்கம் பெயர் மாற்றம் செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளது. என்பது தற்போது தெளிவாக தெரிகிறது. அரசிடம் கேமை மாற்றும் திட்டம் எதுவும் நடக்கவில்லை, பெயரை மாற்றும் திட்டங்கள் மட்டுமே நடக்கின்றன. இந்தியா என்ற பெயரின் மீது ஏன் திடீர் வெறுப்பு? ஏன் ஒன்பது வருடங்கள் காத்திருந்தார்கள்?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
இந்தியா - பாரத் பெயர் மாற்ற சர்ச்சை
டெல்லியில் கடந்த மாதம் நடந்த ஜி20 மாநாட்டின் விருந்து அழைப்பிதழில் இந்தியாவின் குடியரசு தலைவர் என்பதற்கு பதில் பாரதத்தின் குடியரசு தலைவர் என்று மத்திய அரசு குறிப்பிட்டிருந்தது. மேலும் ஜி 20 மாநாட்டின் பிரதமர் இருக்கைக்கு முன்பு பாரத பிரதமர் என்று பெயர் பலகை வைக்கப்பட்டிருந்து. அப்போது இந்தியா - பாரத் பெயர் சர்ச்சை விஸ்வரூபம் எடுத்தது. நாட்டின் பெயரை பாரத் என்று மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்: சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார் பிரதமர் நரேந்திர மோடி..!
இவை அனைத்திற்கும் மத்தியில், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், 'பாரத்' என்ற வார்த்தையின் அர்த்தம் அரசியலமைப்பில் பிரதிபலிக்கிறது என்று கூறியிருந்தார். மேலும் "இந்தியா, அதுவே பாரதம், அரசியலமைப்பில் உள்ளது. தயவு செய்து, அதை படிக்க அனைவரையும் அழைக்கிறேன், ”என்று ஜெய்சங்கர் கூறியிருந்தார். எனினும் பாரத் என்று மத்திய அரசு குறிப்பிடுவதகு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன.
மேலும் எதிர்க்கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு இந்தியா என்று பெயரிட்ட பிறகே, நாட்டின் பெயரை பாரத் என்று மாற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வருவதாகவும் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.