பிரபல வழக்கறிஞர் பாலி நாரிமன் காலமானார்.. ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வாங்கி கொடுத்தவர்..

Published : Feb 21, 2024, 10:11 AM ISTUpdated : Feb 21, 2024, 10:18 AM IST
பிரபல வழக்கறிஞர் பாலி நாரிமன் காலமானார்.. ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வாங்கி கொடுத்தவர்..

சுருக்கம்

பிரபல சட்ட நிபுணரும், மூத்த வழக்கறிஞருமான பாலி எஸ் நாரிமன் இன்று  காலை காலமானார். அவருக்கு வயது 95.

பிரபல வழக்கறிஞர் பாலி நாரிமன் 70 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கறிஞராக பணிபுரிந்தார். இவர் மும்பையில் உள்ள அரசு சட்டக் கல்லூரியின் முன்னாள் மாணவர், பம்பாய் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தனது பயிற்சியைத் தொடங்கினார்.

பின்னர் 1972-ம் ஆண்டு இந்திரா காந்தி அரசாங்கத்தால் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக (ஏஎஸ்ஜி) நியமிக்கப்பட்டார். அதன்படி 1972 முதல் 1975 வரை மத்திய அரசின் கூடுதல் சொலிச்சிட்டராக இருந்தார். எனினும் இந்திரா காந்தி தேசிய அவசரநிலையை விதித்தபோது நாரிமன் பதவியை ராஜினாமா செய்தார். 

காங்கிரஸ் எம்.பி. சசி தரூருக்கு செவாலியே விருது; பிரான்ஸ் நாட்டின் உயரிய அங்கீகாரம்!

உச்சநீதிமன்ற வழக்கறிஞரான ஃபாலி நாரிமனுக்கு 1991-ல் பத்ம பூஷனும், 2007-ம் ஆண்டு பத்ம விபூஷன் விருதும் வழங்கப்பட்டன.  பாலி நாரிமன் 1971 முதல் உச்சநீதிமன்ற வழக்கறிஞராகவும், 1991 முதல் 2010 வரை இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவராகவும் இருந்து வந்தார்.

பொது நிர்வாகத்தில் சிறந்த விளங்கியதற்காக அவருக்கு 2018-ம் ஆண்டு லால் பகதூர் சாஸ்திரி தேசிய விருது வழங்கப்பட்டது. மேலும் 1999 முதல் 2005 வரை ராஜ்யசபாவின் நியமன உறுப்பினராகவும் அவர் இருந்துள்ளார். இவரின் மகன் ரோஹிண்டன் நாரிமனும் உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரா இருக்கிறர்.

இந்தியாவின் மிகவும் பிரபலமான அரசியலமைப்பு வழக்குகள், பல முன்னணி அரசியல் தலைவர்களின் வழக்குகளை பாலி நாரிமன் வாதிட்டுள்ளார்.அந்த வகையில் பாலி நாரிமன் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலிதாவுக்கு வாதாடி ஜாமீன் வாங்கி கொடுத்தவர். சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கர்நாடக சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா உத்தரவிட்டார்.

சோனியா காந்தி மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வு!

மேலும் ஜெயலலிதாவுக்கு ரூ. 100 கோடி அபராதம் விதித்தும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன் வாதிட்டார். அதனடிப்படையில் இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.. எனவே ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதற்கு அவரின் வாதங்கள் முக்கிய காரணமாக அமைந்தன.

நாட்டையே உலுக்கிய போபால் விஷவாயு வழக்கில் யூனியன் கார்பைடு நிறுவனத்திற்கு ஆதரவாக ஃபாலி நாரிமன் வாதிட்டார். ஆனால் அதை தவறு என்று சமீப காலங்களில் ஒப்புக்கொண்டார்.

இந்த நிலையில் பாலி நாரிமன் டெல்லியில் இன்று உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவரின் மறைவுக்கு மூத்த வழக்கறிஞர், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

வீர் சாவர்க்கர் பெயரில் சர்வதேச விருது.. ஏற்க மறுத்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்!
பிரதமர் மோடி இதயங்களை ஹேக் செய்பவர்! மக்களவையில் தாறுமாறாக புகழ்ந்த கங்கனா ரணாவத்!