இனிமே செல் நம்பர் 10 இல்லை... 11 நம்பர் தான்...

 
Published : Oct 13, 2016, 04:47 AM ISTUpdated : Sep 19, 2018, 02:56 AM IST
இனிமே செல் நம்பர் 10 இல்லை... 11 நம்பர் தான்...

சுருக்கம்

நாடுமுழுவதும் தற்போது நடைமுறையில் இருக்கும் 10 இலக்க செல்போன் எண்ணை மாற்றிவிட்டு, 11 இலக்க மொபைல்போன் எண்களை நடைமுறைப்படுத்த தொலைத்தொடர்பு துறை திட்டமிட்டுள்ளது.

மிகவிரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அனைத்து செல்போன் நிறுவனங்களிடம் இருந்து வரும் என எதிர்பார்கப்படுகிறது.

கடந்த 2003-ம் ஆண்டில் 30 ஆண்டுகள் எண் திட்டம் என்ற அடிப்படையில் இப்போதுள்ள செல்போன்கள் எண்களை மத்திய தொலைத்தொடர்புதுறையால் கொண்டு வரப்பட்டன. ஆனால், செல்போன்சேவையின் அசுரத்தனமான வளர்ச்சி, அதிகரித்து வரும் வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு மறுஆய்வு செய்ய வேண்டிய நிலைக்கு தொலைதொடர்புதுறை தள்ளப்பட்டுள்ளது.  இதனால், தற்போதுள்ள 10 இலக்க செல்போன் எண்களை மாற்றிவிட்டு, 11 இலக்க செல்போன் எண்களை நடைமுறைக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, இனிவிரைவில் ஒவ்வொரு செல்போன் நிறுவனங்களுக்கும் குறிப்பிட்ட வரிசை அடிப்படையில் 11 இலக்க செல்போன் எண்கள் தரப்படஉள்ளன. இந்த 11 இலக்க எண் திட்டம் அதிவிரைவில் நடைமுறைக்கு வரலாம் எனத் தெரிகிறது.

PREV
click me!

Recommended Stories

7 மணி ஆனா ஊரே ஆஃப் ஆயிடும்! தினமும் 2 மணி நேரம் டிஜிட்டல் விரதம் இருக்கும் வினோத கிராமம்!
டெல்லியில் 5 ரூபாய்க்கு அறுசுவை உணவு! அடல் கேன்டீனில் தடபுடல் மெனு!