3வது நாளாக தொடரும் துப்பாக்கி சண்டை..!! - 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

 
Published : Oct 13, 2016, 01:13 AM ISTUpdated : Sep 19, 2018, 02:54 AM IST
3வது நாளாக தொடரும் துப்பாக்கி சண்டை..!! - 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

சுருக்கம்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாம்போரில் ராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில்  இன்று 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரை அடுத்த பாம்போரில் உள்ள தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தில் கடந்த 10-ஆம் தேதி நுழைந்த பயங்கரவாதிகள், அந்த அலுவலகத்தை தீயிட்டு கொளுத்தினர். 

மேலும் அங்கு வந்த ராணுவத்தினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார்.

இதையடுத்து, ராணுவ வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே, துப்பாக்கி சண்டை நீடித்து வருகிறது.

இந்நிலையில் இன்று 3 வது நாளாக பாதுகாப்பு படையினர் நவீன ஆயுதங்களுடன் தொடர்ந்து தாக்குதல் நடத்தினர்.

பாதுகாப்புப் படையினர் நடத்திய இந்த தாக்குதலில் இன்று 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

3 நாட்களாக நீடித்து வரும் இந்த துப்பாக்கி சண்டையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

வி.வி.ராஜேஷுக்கு லக்..! ஶ்ரீலேகாவுக்கு ஏமாற்றம்.. திருவனந்தபுரம் மேயர் ரேஸில் பாஜகவின் அதிரடி முடிவு
7 மணி ஆனா ஊரே ஆஃப் ஆயிடும்! தினமும் 2 மணி நேரம் டிஜிட்டல் விரதம் இருக்கும் வினோத கிராமம்!