ரூ.5.5 கோடி செலவில் மகாராஜா எக்ஸ்பிரசில் திருமணம் - இந்திய ரயில்வே துறை அறிமுகம்

 
Published : Oct 13, 2016, 03:22 AM ISTUpdated : Sep 19, 2018, 02:55 AM IST
ரூ.5.5 கோடி செலவில் மகாராஜா எக்ஸ்பிரசில் திருமணம் - இந்திய ரயில்வே துறை அறிமுகம்

சுருக்கம்

ரூ.5.5 கோடி செலவு செய்தால, மகாராஜா சொகுசு எக்ஸ்பிரஸ் ரயிலில், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் ஆடம்பரமாக திருமணம் செய்யலாம் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.

உலக அளவில் முதலிடத்தில் பணக்காரர்கள் தங்கள் வீட்டு நிகழ்ச்சிகளை விமானம், கப்பல்களில் கொண்டாடினர். பின்னர், குறிப்பாக பிறந்தநாள் கொண்டாட்டம், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளையும் அதிக பணம் மற்றும் பொருட் செலவில் ஆடம்பரமாக செய்து வருகின்றனர்.

தற்போது, ரூ.5.5 கோடி செலவு செய்வதற்கு தயாராக இருந்தால், தங்கள் வீட்டு திருமண நிகழ்ச்சியை மகாராஜா எக்ஸ்பிரஸ் சொகுசு ரயிலில் நடத்தி கொள்ளலாம் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. இதற்கான திட்டத்தை ரயில்வேயின் கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (ஐ.ஆர்.சி.டி.சி.) தயாரித்து வருகிறது.

திருமணத்தை சிலர் விமானத்தில் பறந்தபடி நடத்தி இருக்கிறார்கள். கடலின் நடுவே, நீருக்கு அடியிலும் திருமணங்கள் நடந்துள்ளன. இதேபோல திருமணத்தை சுற்றுலாவுடன் சேர்ந்து அனுபவிக்க விரும்பும் பணக்காரர்களுக்காக மகாராஜா எக்ஸ்பிரஸ் ரயிலில் திருமணம் நடத்தும் திட்டத்தை ரயில்வே அறிமுகம் செய்ய உள்ளது.

மணமகன், மணமகள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் திருமணத்தை தங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சியாக நினைவு கூறுவதற்காக இந்த புதிய திட்டம் அமல்படுத்தப்படுவதாக ஐ.ஆர்.சி.டி.சி. மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மகாராஜா எக்ஸ்பிரஸ் ரயில் முழுவதையும் 88 பயணிகளுக்காக மொத்தம் 8 நாட்களுக்கு புக்கிங் செய்ய (வெட்டிங் பேக்கேஜ்) ரூ5.5 கோடி செலவாகும் என்று அந்த அதிகாரி கூறினார்.

இந்த சொகுசு ரயிலில் மொத்தம் 24 பெட்டிகள் உள்ளன. இவற்றில் 43 விருந்தினர் அறைகள் உள்ளன. இதில் 20 டீலக்ஸ், 18 ஜூனியர் சூட்கள், 4 சூட்கள் மற்றும் ஒரு பிரசிடென்சியில் சூட் ஆகியவை அடங்கும்.

திருமணத்துடன் இந்த ரயிலில் 8 நாள் ஹெரிடேஜ் டூர் மேற்கொள்ள, அதாவது மும்பையில் இருந்து புறப்பட்டு அஜந்தா, உதய்பூர், ஜோத்பூர், பிகானீர், ஜெய்பூர், ரன்தம்பூர் மற்றும் ஆக்ரா வழியாக டெல்லி செல்வதற்கு ஒருவருக்கு சராசரியாக ரூ.4.5 லட்சம் கட்டணம் ஆகும்.

பிரசிடென்சியல் சூட்டுக்கு ரூ.15.8 லட்சம் ஆகும்.ஹெரிடேஜ் டூர் தவிர, இந்தியன் பனோரமா டூர் போன்ற பிற பேக்கேஜ்களும் உண்டு. பனோரமா டூர் என்பது நாட்டின் தலைநகர் டெல்லியில் இருந்து புறப்பட்டு ஜெய்பூர், ஆக்ரா, குவாலியர், கஜுராஹோ, வாரனாசி மற்றும் லக்னோ வழியாக சென்று மீண்டும் டெல்லியை அடையும்.

PREV
click me!

Recommended Stories

7 மணி ஆனா ஊரே ஆஃப் ஆயிடும்! தினமும் 2 மணி நேரம் டிஜிட்டல் விரதம் இருக்கும் வினோத கிராமம்!
டெல்லியில் 5 ரூபாய்க்கு அறுசுவை உணவு! அடல் கேன்டீனில் தடபுடல் மெனு!