ஊடகங்கள் கட்டப்பஞ்சாயத்து செய்கின்றன. அச்சு ஊடகங்கள் இன்னும் சிறிது நம்பகத்தன்மையோடு உள்ளன, ஆனால், மின்னணு ஊடகங்கள் நம்பகத்தன்மையை இழந்துவிட்டன என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா குற்றம்சாட்டினார்.
இன்றுள்ள சூழலில் ஊடகங்கள் கட்டப்பஞ்சாயத்து செய்யும் வேலைச் செய்கின்றன. அச்சு ஊடகங்கள் இன்னும் சிறிது நம்பகத்தன்மையோடு உள்ளன, ஆனால், மின்னணு ஊடகங்கள் நம்பகத்தன்மையை இழந்துவிட்டன என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா குற்றம்சாட்டினார்.
டெல்லியில், முன்னாள் நீதிபதி சத்ய பிரபாசின்ஹா நினைவாக கருத்தரங்கு ஒன்று இன்று நடந்தது. இதில் பங்கேற்று தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேசியதாவது:
ஆசிரியர் நியமன ஊழல்: மம்தாவின் வலது கரத்தை வீடு புகுந்து தூக்கிய அமலாக்கத்துறை.. அதிர்ச்சியில் தீதி.
ஒரு வழக்கை முடிவு செய்வதில் ஊடகங்களின் விசாரணை உதவி செய்யும் காரணியாக இருக்காது. அனுபவம் வாய்ந்த நீதிபதிகள் கூட முடிவெடுப்பது கடினம் என்று கூறி ஊடகங்கள் கட்டப்பஞ்சாயத்து செய்கின்றன. தவறானத் தகவல், உள்நோக்கம் கொண்ட விவாத நிகழ்ச்சி, ஆகியவை ஜனநாயகத்துக்கு கேடுவிளைவிப்பது நிரூபணமாகிறது.
ஒருதரப்பான கருத்துக்களை ஊடகங்கள் பரப்புவது, மக்களைப் பாதிக்கிறது, ஜனநாயகத்தை பலவீனமாக்குகிறது, நீதி செயல்பாட்டு முறைக்கே கேடாக இருக்கிறது. இந்த முறையால் நீதிபரிபாலன முறையும் பாதிக்கப்படுகிறது.
ஊடகங்கள் அதிகமான முன்னுரிமை எடுத்துக்கொண்டு செயல்படுதல், பொறுப்புகளைக் கடந்து நடத்தல் போன்றவை ஜனநாயகத்தை இரு அடி, பின்னோக்கி நகர்த்தும்.ஒருங்கிணைந்த பிரச்சாரங்கள், குறிப்பாக சமூக வலைத்தளங்களில் நீதிபதிகளுக்கு எதிராக கருத்துகள், ஊடகத்தின் விசாரணை, நீதிமன்றம் செயல்பாட்டை பாதிக்கும்.
கட்சியும் சின்னமும் பறிபோகிறதா? என்ன நடக்கிறது உத்தவ் தாக்கரேவின் சிவ சேனா கட்சியில்?
நீதிபரிபாலன முறை என்பது எளிதான பொறுப்பு அல்ல. நீதிபதிகள் வழிநடத்தும் எளிய வாழ்க்கை குறித்து பொய்யான கட்டுக்கதைகளை பரப்பும்போது அதை நாங்களும் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது.
புதிய நவீன ஊடகங்களுக்கு எதையும் பெரிதாக்கும் திறன் இருக்கிறது, ஆனால், நல்லது எது, கெட்டது எது, சரிஎது தவறு எது, உண்மை எது போலி எது எனப் பிரித்துப்பார்க்கும் தன்மைஇல்லாததாக இருக்கிறது. ஊடகத்தின் சார்பில் நடக்கும் விசாரணை ஒரு வழக்கை முடிவு செய்யும் காரணியாகஇருக்காது.
அச்சு ஊடகங்களுக்கு இன்றுவரை சிறிது நம்பக்தன்மை இருக்கிறது. ஆனால், மின்னணு ஊடகங்களுக்கு நம்பகத்தன்மையே இல்லை, அனைத்தும் காற்றில் பறந்துவிட்டன. சமூக ஊடகங்களில் மோசமாக நடக்கிறார்கள்.
rahul: NDA: புள்ளிவிவரங்கள் இல்லாத (NDA) தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு: ராகுல் காந்தி சாடல்
தொடரும் அத்துமீறல்கள் அதனால் உருவாகும் சமூக அமைதியின்மை ஏற்படுவதால், ஊடக விதிகள் கடுமையாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுகிறது.ஆதலால் ஊடகங்கள் தங்களை சுயமாகமுறைப்படுத்திக் கொள்ள வேண்டும், வார்த்தைகளை கவனமாகப் பயன்படுத்த வேண்டும்.
நீதிபதிகள் உடனடியாக எதற்கும் எதிர்வினையாற்றமாட்டார்கள். ஆதலால் அவர்களை பலவீனமானவர்கள், உதவிக்கு ஆள்இல்லாதவர்கள் என்று தவறாக நினைக்காதீர்கள். சுதந்திரங்கள் பொறுப்புடன் எல்லைக்குள் இருந்தால், எந்தவிதமான கட்டுப்பாடுகளும், தேவையில்லை.
இவ்வாறு என்.வி.ரமணா தெரிவித்தார்