கட்சியும் சின்னமும் பறிபோகிறதா? என்ன நடக்கிறது உத்தவ் தாக்கரேவின் சிவ சேனா கட்சியில்?

Published : Jul 23, 2022, 02:14 PM IST
கட்சியும் சின்னமும் பறிபோகிறதா? என்ன நடக்கிறது உத்தவ் தாக்கரேவின் சிவ சேனா கட்சியில்?

சுருக்கம்

மகாராஷ்டிரா மாநிலத்தில் யார் உண்மையான சிவ சேனா என்ற பிரச்சநை இந்திய தேர்தல் ஆணையம் வரை சென்றுள்ளது. எம்எல்ஏக்களின் ஆதரவு யாருக்கு அதிகமாக இருக்கிறது என்பதை முடிவு செய்து கொண்டு வருமாறு இந்திய தேர்தல் ஆணையம் சிவ சேனாவின் இரண்டு பிரிவுகளையும் கேட்டுக் கொண்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் யார் உண்மையான சிவ சேனா என்பதை நிரூபிப்பதற்காக, அதிக எம்எல்ஏக்களின் ஆதரவு யாருக்கு இருக்கிறது என்பதை முடிவு செய்து கொண்டு வருமாறு இந்திய தேர்தல் ஆணையம் சிவ சேனாவின் இரண்டு பிரிவுகளையும் கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்த முடிவுகளுடன், இரண்டு பிரிவினரும் வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி தங்களது பதிலை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் பின்னர் இந்தக் கட்சியில் ஏற்பட்டு இருக்கும் சிக்கல்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தாங்கள்தான் உண்மையான சிவ சேனா என்று சிவ சேனாவில் இருந்து பிரிந்து சென்ற ஏக்நாத் ஷிண்டேவும், சிவ சேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவும் தேர்தல் ஆணையத்தில் உரிமை கோரி இருந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் இவ்வாறு தெரிவித்துள்ளது.

ஆசிரியர் நியமன ஊழல்: மம்தாவின் வலது கரத்தை வீடு புகுந்து தூக்கிய அமலாக்கத்துறை.. அதிர்ச்சியில் தீதி.

சிவ சேனாவின் உத்தவ் தாக்கரே ஆதரவாளரான அனில் தேசாய் தேர்தல் ஆணையத்துக்கு எழுதி இருந்த கடிதத்தில், ''சிவ சேனாவில் இருந்து வெளியேறிய ஏக்நாத் ஷிண்டேவும் அவரது ஆதரவாளர்களும் கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும்,  பால சாகேப், சிவ சேனா ஆகிய பெயர்களை அதிருப்தி கோஷ்டியினர் பயன்படுத்தக் கூடாது என்றும் அனில் தேசாய் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், ஏக்நாத் ஷிண்டே, குலாப் ராவ் பாட்டீல், உதய் சாமந்த் ஆகியோரை சிவ சேனா கட்சியின் பொறுப்புகளில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்தில் சிவ சேனா கட்சியில் இருந்து வெளியேறி இருந்த ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவாளர்களுடன், பாஜக கட்சியுடன் இணைந்து மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராகி இருக்கிறார்.  இவரிடம் செவ் சேனாவின் அதிகபட்ச எம்.எல்.ஏக்கள் இருக்கும்பட்சத்தில் தனக்குத்தான் கட்சி மற்றும் சின்னத்தை பயன்படுத்துவதற்கான உரிமை இருக்கிறது என்று குரல் கொடுத்து வருகிறார். தற்போது தேர்தல் ஆணையத்தின் கையில் இந்தப் பிரச்சனை கொண்டு செல்லப்பட்டுள்ளது.

உக்ரைனில் இருந்து வந்த மாணவர்கள் இந்தியாவில் மருத்துவ கல்வி தொடர முடியாது... மத்திய அரசு அதிர்ச்சி.

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

மதக் கூட்டங்களில் பெண் ஜிஹாதிகள்..! இந்தியாவிற்கு எதிராக படுபயங்கர சதித்திட்டம்..! எல்லையில் தீவிர பாதுகாப்பு..!
IndiGo பயணிகளுக்கு ஷாக் கொடுத்த CEO.. இன்னும் 10 நாளைக்கு இது தான் கண்டிஷன்..!