இந்தியாவில் 834 பேருக்கு ஒரு மருத்துவர் இருக்கிறார். உலக சுகாதார அமைப்பு ஆயிரம் பேருக்குஒரு மருத்துவர் இருக்க வேண்டும் என்றநிலையில் அதைவிட இந்தியாவின் நிலை சிறப்பாக இருக்கிறது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 834 பேருக்கு ஒரு மருத்துவர் இருக்கிறார். உலக சுகாதார அமைப்பு ஆயிரம் பேருக்குஒரு மருத்துவர் இருக்க வேண்டும் என்றநிலையில் அதைவிட இந்தியாவின் நிலை சிறப்பாக இருக்கிறது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இணைஅமைச்சர் பாரதி பிரவின் பவார் நேற்று மக்களவையில் பேசியதாவது:
தேசிய மருத்துவ ஆணையத்தின் தகவலின்படி, நாட்டில் மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்த 13 லட்சத்து 8ஆயிரத்து 9 மருத்துவர்கள் உள்ளனர். இதில் 80 சதவீதம் அலோபதி மருத்துவர்கள் பணியில் உள்ளனர். 5.65 லட்சம் ஆயுஷ் மருத்துவர்கள் உள்ளனர்.
இந்தியாவில் 834பேருக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதத்தில் உள்ளனர். இது உலக சுகாதார அமைப்பின் கணக்கீட்டைவிட சிறப்பானது. உலக சுகாதார அமைப்பு 1000:1 என்ற ரீதியில் மருத்துவர் இருக்கலாம் என்றது.
இது தவிர 34.33 லட்சம் செவிலியர்கள், 13 லட்சம் பேர் சுகாதாரம் சார்ந்த பணியிலும் உள்ளனர்.
மருத்துவப் படிப்பில்முதுநிலையில் காலியிடம் ஏதும் இல்லை. நாட்டில் மருத்துப் படிப்புகளாகன தேவை வேகமாக அதிகரி்த்து வருகிறது. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் 2014் ஆண்டில்51,348 இருந்தது, தற்போது 91,927 இடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஏறக்குறைய 79 சதவீதம் இடங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் 93சதவீதம் அதிகரிக்கப்பட்டு, 31,185 இடங்கள், 60,202 இடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
வரும்காலத்தில் மருத்துவப் படிப்புகளக்கான இடங்கள் அதிகரி்க்கப்படும். தற்போது 157 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அரசு ஒப்புதல் அளி்த்துள்ளது, 72 கல்லூரிகள் கட்டப்பட்டு வருகின்றன
தேசிய அளவில் வளரும் ஆம் ஆத்மி.. சகித்துக் கொள்ளாத பாஜக.. அரவிந்த் கெஜ்ரிவால் சொல்லும் காரணம்!
இவ்வாறு பாரதி பிரவின் தெரிவித்தார்